சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
முலாயம் சிங் யாதவ் (82) தற்போது குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிற்பகலில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இவரது மகன் அகிலேஷ் யாதவ்; மருமகள், டிம்பிள் யாதவ்; மேலும் சில குடும்ப உறுப்பினர்கள் மாலையில் மருத்துவமனைக்கு வந்தனர்.
இதையும் படியுங்கள்: தீக்ஷாபூமியில் இருந்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கான பிரசாரத்தை தொடங்கிய சசி தரூர்
சமாஜ்வாதி கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. “மதிப்பிற்குரிய தலைவர் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரது உடல்நிலை சீராக உள்ளது. மூத்த மருத்துவர்களின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று ட்வீட் செய்துள்ளது.
உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா அவர் குணமடைய வாழ்த்துவதாக ட்வீட் செய்துள்ளார்.
“உ.பி.யின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமடைந்து வருவதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil