கடந்தாண்டு போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட பலரை கைது செய்த மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (என்சிபி) தலைவராக இருந்த சமீர் வான்கடே, திங்கள்கிழமை டிசென்னையில் உள்ள வரி சேவை இயக்குநரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, என்சிபியில் இருந்து மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்திற்கு சமீர் வான்கடே மாற்றப்பட்டார். ஏனெனில், அவர் ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
போதை மருந்து வழக்கில் சிக்கிய ஆர்யன் கான் விடுதலையான சில நாள்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வழக்கில் "தரமற்ற விசாரணை"க்காக வான்கடே மீது விசாரணையைத் நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட என்சிபி குற்றப்பத்திரிகையில் ஆர்யன் பெயர் இடம்பெறவில்லை. இந்த வழக்கில் ஆர்யனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாதபோதிலும், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கை விசாரிக்க வான்கடே 2020 இல் NCB க்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கில் சுஷாந்த் சிங் தோழி ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார்.
NCB மண்டல இயக்குநராக பணியாற்றிய காலத்தில், வான்கடே பல வழக்குகளை பதிவு செய்தார். அதில், சிறிய அளவிலான போதை பொருள் பறிமுதலும் அடங்கும். நாட்டில் பெரியளவில் நடக்கும் போதைப்பொருள் புழக்கத்திற்கு பின்னால் என்சிபி செல்ல வேண்டிய நிலையில், சிறியளவு சம்பந்தப்பட்ட போதை பொருள் வழக்குகளில் ரெய்டு நடத்தியதற்காக வான்கடே பலரால் விமர்சிக்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil