சாமசங் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலையை நொய்டாவில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, தென் கொரியா அதிபர் மூன் ஜேய்-இன் முதன்முதலாக 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். வரும் 11-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம், கடந்த 1990ம் ஆண்டு, நொய்டாவில் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலையை துவக்கியது. அந்த ஆலையை தொலைக்காட்சி தயாரிக்கும் ஆலையாக கடந்த 1997ம் ஆண்டு உருமாற்றம் செய்தது. இதைத் தொடர்ந்து, 2005ம் ஆண்டு முதல் மொபைல் ஃபோன் உற்பத்தியை செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆலை விரிவாக்கத்திற்காக ரூ.4 ஆயிரத்து 915 கோடி ஒதுக்கியது. தற்போது நொய்டாவில் 35 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிறுவனத்தில் ஆண்டிற்கு 67 மில்லியன் ஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் ஆண்டிற்கு 120 மில்லியன் ஃபோன்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், நொய்டாவில் துவங்க உள்ள புதிய தொழிற்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். துவக்க விழாவில் பிரதமர் மோடி தென் கொரிய அதிபரும் கலந்து கொண்டார்.
இதன் மூலம் சுமார் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் மோடி, கடந்த 2014ம் ஆண்டு முதல் மொபைல் உற்பத்தி பிரிவில் மட்டும் இந்தியாவில் நான்கு லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. 'GeM' என்றால் Government e Market என்று அர்த்தம். இதன் மூலம், உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாகவே அரசாங்கம் பொருட்களை வாங்கிக் கொள்ளும். இது நடுத்தர மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் வெளிப்படைத் தன்மையும் இருக்கும்." என தெரிவித்துள்ளார்.