டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிபந்தனையின்றி வாபஸ் பெறுவது உட்பட, அரசாங்கத்திடம் இருந்து திட்டமான முறையான கடிதம் பெறப்பட்ட பின்னர், விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று பாரதிய கிசான் சங்கம் தலைவர் ஜோகிந்தர் உக்ரஹான் உறுதிப்படுத்தினார்.
சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம், டெல்லி எல்லையில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தது. பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஜோகிந்தர் உக்ரஹான், விவசாயிகள் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிபந்தனையின்றி திரும்பப்பெறுவது உட்பட அரசிடம் இருந்து ஒரு முறையான கடிதம் பெறப்பட்டதை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று உறுதிப்படுத்தினார்.
டிசம்பர் 11 முதல், வெவ்வேறு எல்லை பகுதிகளில் உள்ள விவசாயிகள் போராட்ட இடங்களை காலி செய்துவிட்டு தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவார்கள் என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதற்கான முறையான முடிவை எடுப்பது, போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து போலீஸ் வழக்குகளையும் நிபந்தனையின்றி வாபஸ் பெறுவது, 32 தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடமிருந்து திருத்தப்பட்ட வரைவு முன்மொழிவை ஏற்றுக்கொண்ட பிறகு, சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் டெல்லியின் சிங்கு எல்லையில் வியாழக்கிழமை மதியம் கூடியது.
திருத்தப்பட்ட முன்மொழிவில் புதன்கிழமை சலுகைகள் முன்மொழியப்பட்ட நிலையில், போராட்டம் தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை என்றும், போராட்டத்தைக் கைவிடுமாறு தொழிற்சங்கங்களைக் கேட்டுக் கொண்டதாக அரசாங்கம் கூறியது. விவசாய சங்கங்களின் கூட்டத்தைத் தொடர்ந்து, சம்யுக்த் கிசான் மோர்ச்சா வியாழக்கிழமை நண்பகல்க்குள் தனது கோரிக்கைகளை ஒப்புக்கொள்ளும் அரசிடம் இருந்து முறையான தகவல் கிடைத்தால், “போராட்டம் நிறுத்தப்படும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்” என்று கூறியுள்ளது.
திருத்தப்பட்ட முன்மொழிவின்படி, விவசாயிகள் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறு மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசு முறையிடும். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா - பாஜக ஆளும் மாநிலங்கள் - போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.
டெல்லியில் போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராகவும் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனரகம் போன்ற பல்வேறு மத்திய அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது… போராட்டம் வெற்றியை நோக்கிச் செல்கிறது” என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாயிட் கூறினார்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு முன்மொழியப்பட்ட குழுவின் பிரச்சினையில், சம்யுக்த் மோர்ச்சா சங்கத்தின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளதாக விவசாயத் தலைவர்கள் தெரிவித்தனர். "அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை எப்படி வழங்கப்பட முடியும் என்பதை உறுதிசெய்யும் வகையில், குழுவின் ஆணையின் மீது அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது” என்று மற்றொரு பாரதிய கிசான் சங்கத் தலைவர் அடம்ஜித் சிங் கூறினார்.
இதனிடையே, சிங்கு எல்லையில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா சங்கத்தின் கூட்டத்திற்கு முன்னதாக போராட்ட இடங்களில் உள்ள கூடாரங்களை அகற்றி புறப்பட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்
இந்த நிலையில், சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் டெல்லி எல்லையில் நடத்தி வந்த போராட்டத்தை வியாழக்கிழமை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஜோகிந்தர் உக்ரஹான், போராட்டத்தின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிபந்தனையில்லாமல் வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து ஒரு முறையான கடிதம் பெறப்பட்ட பின்னர், போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று உறுதிப்படுத்தினார்.
டிசம்பர் 11 முதல், டெல்லியின் வெவ்வேறு எல்லைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் போராட்ட இடங்களை காலி செய்துவிட்டு தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவார்கள் என்று சம்யுகிதா கிசான் மோர்ச்சா சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய கிசான் மஸ்தூர் சபா, ஒரு ஆண்டு 14 நாட்களாக டெல்லிக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராடிய வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கத்தின் மாபெரும் வெற்றியை பாராட்டியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.