sana ganguly, sana ganguly citizenship act post, sana ganguly instagram, sana ganguly on citizenship amendment act, sourav ganguly, sourav ganguly on sana instagram post, சவுரவ் கங்குலி, சனா கங்குலி, குடியுரிமை போராட்டம், இன்ஸ்டாகிராம், பதிவு, சர்ச்சை, விளக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான சனா கங்குலியின் இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலி விளக்கம் அளித்துள்ளார். எனது மகளுக்கு அரசியல் தெரியாது, அவரை விட்டு விடுங்கள் என்று கங்குலி அதில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன் இந்தியாவிற்கு வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்யும் குடியுரிமை திருத்த சட்டம், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
Advertisment
Advertisements
இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி, பிரபல இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின், ’தி எண்ட் ஆப் இந்தியா’ என்ற புத்தகத்தில் குறிப்பபிடப்பட்டுள்ள சில வரிகள் அடங்கிய பக்கத்தை பதிவிட்டு குடியிரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தனது நிலைப்பாட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் சனாவின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.
Please keep Sana out of all this issues .. this post is not true .. she is too young a girl to know about anything in politics
இந்த பதிவு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சவுரவ் கங்குலி இந்த பதிவு தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த விவகாரத்திலிருந்து சனாவை விட்டுவிடுங்கள். இந்த பதிவு உண்மை இல்லை. அவள் இளம் பெண். அரசியலை பற்றி சனாவுக்கு எதுவும் தெரியாது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
கங்குலியின் விளக்கத்தை தொடர்ந்து, சனா கங்குலி, அந்த பதிவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.