சனாதன தர்மம் தொடர்பாக உதயநிதியின் கருத்துக்கள் சர்ச்சையாகி உள்ளன. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி தலைவர்கள் பதில் கூற வேண்டும் என மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. அவருக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் மௌமாக இருப்பதாக மத்தியு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர், “சனாதன தர்மத்தை திமுக தாக்கி வரும் நிலையில் காங்கிரஸ் அமைதியாக உள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை ஏன் இதுபற்றி பேசவில்லை, சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் சனாதன தர்மத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று ஏன் சொல்லவில்லை என்று நான் கேட்க விரும்புகிறேன்”
சனாதன தர்மம் வாசுதேவ குடும்பகம்’ என்ற செய்தியைத் தருகிறது. அது உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறது.
அவர் கூறியது குறித்து திமுக தலைவரிடம் விளக்கம் உள்ளதா என்று கேட்க வேண்டும். இந்திய கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் தேசம் மன்னிக்காது” என்றார்.
இதனிடையே, சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது என்று கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நமது நாடு மதம் மற்றும் கோயில்களுடன் தொடர்புடையது. அவர் (உதயநிதி) பொறுப்பான பதவியில் இருக்கிறார், அவருடைய தந்தை முதல்வர்” என்றார்.
இதற்கிடையில், எதிர்கட்சியான இந்திய கூட்டணி வாக்கு வங்கி அரசியலுக்காக எந்த நிலைக்கும் தள்ளப்படுகிறது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘சர்வ தர்ம சமபவ’ (அனைத்து மதங்களுக்கும் மரியாதை) என்பது காங்கிரஸின் சித்தாந்தம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல சுதந்திரம் உள்ளது. நாங்கள் அனைவரின் நம்பிக்கைகளையும் மதிக்கிறோம்” என்றார்.
இதற்கிடையில், கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூருவில், “மக்களை சமத்துவத்துடன் நடத்தாத எந்த மதமும் ஒரு நோயைப் போன்றது” என்று கூறினார்.
மறுபுறம், ராஜஸ்தான் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், “இந்தக் கருத்து உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட கருத்து என்றும், அதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில், இந்து அறநிலையத் துறை அமைச்சர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை இழிவுப்படுத்தி பேசினார் என்ற சர்ச்சைகள் எழுந்தன. அவர் சனாதன தர்மத்தை கொசு, கரோனாவுடன் ஒப்பிட்டு பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.