Advertisment

'இ.டி இயக்குநரின் 3வது பதவி நீட்டிப்பு செல்லாது': சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

அமலாக்க இயக்குனரக இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட மூன்றாவது பணி நீட்டிப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sanjay Mishra ED director Supreme Court holds third extension invalid Tamil News

சஞ்சய் மிஸ்ரா ஜூலை 31ஆம் தேதி வரை அமலாக்கத் துறை இயக்குநராக தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Supreme Court on Sanjay Mishra's extension Tamil News: கடந்த நவம்பர் 19, 2018 அன்று இரண்டு ஆண்டுகளுக்கு அமலாக்கத் துறை இயக்குநராக சஞ்சய் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு, நவம்பர் 13, 2020 அன்று குடியரசுத் தலைவர் முந்தைய உத்தரவை மாற்றியமைத்து, மிஸ்ராவின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளாக மாற்றினார்.

Advertisment

இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் பி ஆர் கவாய் மற்றும் எல் நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த செப்டம்பர் 8, 2021 அன்று, சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீட்டித்த மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்தது. இருப்பினும், "பணிக்கால நீட்டிப்பு, ஓய்வுபெறும் வயதை அடைந்த அதிகாரிகளுக்கு அரிதான மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும்" என்றும், அத்தகைய நீட்டிப்புகள் "குறுகிய காலத்திற்கு இருக்க வேண்டும்" என்றும் கூறியது.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அமலாக்கத்துறை இயக்குனரை நியமிப்பதில் மத்திய அரசின் அதிகாரத்திற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அமலாக்கத்துறை இயக்குநரின் குறைந்தபட்ச பதவிக் காலத்தை நிர்ணயிக்கும் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் சட்டம், 2003 இன் பிரிவு 25 (d) படி, 'இரண்டு வருடங்களுக்குக் குறையாமல்' என்கிற வார்த்தைகளை 'இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இல்லை' என்று பொருள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் கூறினர்.

இதையடுத்து, "அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது. என்றும், உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force - FATF) நிலுவையில் உள்ள மறுஆய்வு காரணமாக இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் "தொடர்ச்சியானது நாட்டிற்கு உதவும்" என்றும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அமலாக்க இயக்குனரக இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட மூன்றாவது பணி நீட்டிப்பு செல்லாது என்றும், இந்த ஆண்டு நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) நடத்தும் சக மதிப்பாய்வைக் கருத்தில் கொண்டு, சுமூகமான மாற்றத்தை செயல்படுத்த, மிஸ்ராவின் பதவிக்காலம் ஜூலை 31 வரை இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட மூன்றாவது நீட்டிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்ற 2021 தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாம் என்று மே மாதம் கூறி இருந்தது குறிப்பித்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Supreme Court Enforcement Directorate Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment