குற்றங்களுக்காக குடிமக்களின் மொபைல் போன்கள் அல்லது மடிக்கணினிகளை பறிமுதல் செய்யும் விவகாரத்தில், புலனாய்வு முகமைகளால் மறுபரிசீலனை செய்யக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க உத்தரவாக, நவம்பர் மாதம் "லாட்டரி மன்னன்" சாண்டியாகோ மார்ட்டின், அவரது உறவினர்கள் மற்றும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களில் இருந்து உள்ளடக்கத்தை அணுகவும், நகலெடுக்கவும் அமலாக்க இயக்குனரகத்திற்கு (ED) உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Santiago Martin case — SC red line for ED: Can’t copy, access content from laptop, mobile phones
ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மேகாலயாவில் லாட்டரி வியாபாரத்தை "சட்டவிரோதமாக" கைப்பற்றியதாகக் கூறப்படும் மேகாலயா காவல்துறையின் புகாரைத் தொடர்ந்து ஆறு மாநிலங்களில் 22 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.12.41 கோடி ரொக்கம் கிடைத்தது.
சாண்டியாகோ மார்ட்டின் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங், 2014 மற்றும் 2019 க்கு இடையில் ரூ.1,368 கோடி பத்திரங்களை வாங்கியதன் மூலம், தேர்தல் பத்திரங்களுக்கு மிகப்பெரிய நன்கொடை அளிக்கும் நிறுவனமாக இருந்தது. இந்த நிறுவனம் கட்சி எல்லைகளுக்கு அப்பால் நன்கொடை அளித்துள்ளது - திரிணாமுல் காங்கிரஸ் அதன் மிகப்பெரிய பயனாளியாக ரூ. 542 கோடி பெற்றுள்ளது, தி.மு.க ரூ.503 கோடி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ.154 கோடியும், பா.ஜ.க ரூ.100 கோடியும் பெற்றுள்ளன.
டிசம்பர் 13 அன்று நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோரால் நிறைவேற்றப்பட்ட இரண்டு பக்க உத்தரவு, பியூச்சர் கேமிங் நிறுவன வழக்கை "இணைக்கப்பட்ட பிற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. ஃபியூச்சர் கேமிங்கின் மனுவில் பட்டியலிடப்பட்டுள்ள நான்கு வழக்குகளில், அமேசான் இந்தியா ஊழியர்கள் தங்கள் மின்னணு சாதனங்களை தயாரிக்க அமலாக்கத்துறையின் கோரிக்கைகளை எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகள் மற்றும் நியூஸ் கிளிக் வழக்கு ஆகியவை அடங்கும், இந்த வழக்குகளில், 2023ல் டெல்லி காவல்துறையால் மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகளை பறிமுதல் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் கோரினர்.
மனுதாரர்கள் தங்கள் மனுவில், "தங்கள் அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை, குறிப்பாக, தனியுரிமையின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க" முயன்றனர். "தனிப்பட்ட டிஜிட்டல் சாதனங்களில் சேமிக்கப்படும் தகவல்கள் ஆழமான அந்தரங்கமானது, தனிப்பட்டது மற்றும் ஒரு தனிநபரின் வாழ்க்கையைப் பற்றி மேலும் வெளிப்படுத்துகிறது, அவை அனைத்தும் ஒரு இடத்தில் உள்ளது..." என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு சாண்டியாகோ மார்ட்டினின் மொபைல் ஃபோனின் உள்ளடக்கங்கள் மற்றும் அவரது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சொந்தமான எலக்ட்ரானிக் சாதனங்களின் நீண்ட பட்டியல் எதையும் "அணுக மற்றும் நகலெடுக்க வேண்டாம்" என்று அமலாக்கத்துறையைக் கேட்டுக் கொண்டது. அந்தந்த டிஜிட்டல் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளைப் பிரித்தெடுக்கும் நோக்கத்திற்காக அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் இருப்பு தேவைப்படும் அளவிற்கு பி.எம்.எல்.ஏ (பணமோசடி தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழங்கிய சம்மனையும் நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர்.
தடை உத்தரவு பற்றி கேட்டபோது, மூத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இது "முன்னோடியில்லாதது" என்று கூறினார், ஆனால் இந்த வழக்கில் சாண்டியாகோ மார்ட்டினுக்கு எதிராக "மற்ற குறிப்பிடத்தக்க ஆதாரங்கள்" இருப்பதால் பெரிய பின்னடைவு இல்லை என்றும் கூறினர். டிஜிட்டல் ஆதாரங்களைத் தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் தொடர்பான சி.பி.ஐ கையேட்டின் வழிகாட்டுதல்களை அவர்கள் பின்பற்றுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஃபியூச்சர் கேமிங் குழுவுடன் இணைக்கப்பட்ட ரூ.622 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை சமீபத்தில் பறிமுதல் செய்தது. தவிர, சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் ஃபியூச்சர் கேமிங்கிற்கு எதிராக அமலாக்கத்துறை பல முக்கியமான வழக்குகளை வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பியூச்சர் கேமிங் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 12 வகையான மின்னணு சாதனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 17 மொபைல் போன்கள் (பெரும்பாலும் இரட்டை சிம்கள் கொண்டவை), "டேட்டா டம்ப்கள்" கொண்ட கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்கள் மற்றும் மார்ட்டின், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த ஊழியர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சில மின்னஞ்சல்களின் பேக்-அப் ஆகியவை அடங்கும்.
234 பக்க மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் ரோகினி மூசா, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், உச்ச நீதிமன்ற உத்தரவு மற்ற வழக்குகளுக்கு ஒரு முக்கிய முன்னுதாரணமாக மாறும் என்று கூறினார். “முதலாவது விஷயம் என்னவென்றால், அமலாக்கத்துறைக்கு எதிரான தடையை நீக்குவதற்கான தேதியை உச்ச நீதிமன்றம் வழங்கவில்லை. அடிப்படை உரிமைகள் மற்றும் தனியுரிமை உரிமைகள் மீறப்படுவதைத் தவிர, அமலாக்கத்துறை தூண்டில் விரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும், மேலும் மின்னணு சாதனங்களில் காணப்படும் ஆதாரங்கள் மூலம் மனுதாரரை (சாண்டியாகோ மார்ட்டின்) இந்த மற்றும் பிற வழக்குகளில் குற்றம் சாட்டுவதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.
"தற்போது, இதுபோன்ற கட்டுப்பாடற்ற சாதனங்களைப் பறிமுதல் செய்வதற்கும், அதைத் தொடர்ந்து வரம்பற்ற அணுகலுக்கும் எந்த நடைமுறையும் பரிந்துரைக்கப்படவில்லை, இது சாத்தியமான தவறான விசாரணைக்கு வழிவகுக்கும்" என்று மனு கூறுகிறது. மேலும், மொபைல் ஃபோன்களில் உள்ள தகவலின் தன்மை, நிதி விவரங்கள், மருத்துவப் பதிவுகள், கடவுச்சொற்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட சாதனங்கள் போன்ற "உணர்திறன் வாய்ந்த தனிப்பட்ட தகவல்" ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும், மேலும் வணிகத் தரவு, மூலோபாய ஆவணங்கள் மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும்.
முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி உள்ளிட்ட நிறுவன வழக்கறிஞர்களும், ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் அரசு நடத்தும் லாட்டரி வணிகம் தொடர்பாக இதுவரை 28,205 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி செலுத்தியுள்ளதாக இடைக்கால நிவாரணம் கோரிய மனுவில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.