Advertisment

சோலார் பேனல் வழக்கு.. சர்ச்சை நடிகை சரிதா நாயருக்கு தண்டனை நிறுத்திவைப்பு

முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

saritha nair case : சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை, கோவை நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய நவ.14 வரை கோவை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

Advertisment

கேரள மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் மோசடி வழக்கு மூலம் பிரபலமானவர் சரிதா நாயர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹைபி ஈடன் என பலருக்கும் சோலார் மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

சோலார் பேனல் தொடர்பான ஆலோசனைக்கு சென்ற போது உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும் குற்றம் சாட்டினார். சரிதா நாயரின் இந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஊழல் பிரச்னை, கேரள சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருந்தது. 2016-ல் சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு கேரளா நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.

இந்த விவகாரத்தில் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்தார்.இதுத் தொடர்பான வழக்கு கேரளா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இதற்கிடையில், தமிழகத்தில் சோலார் பேனல் மோசடி புகாரிலும் சரிதா நாயர் சிக்கினார்.

வடவள்ளியில் ஐ.சி.எம்.எஸ். என்ற பெயரில் காற்றாலை நிறுவனம் நடத்தி தொழிலதிபர்களிடம் மோசடி செய்ததாக சரிதா நாயகர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுத் தொடர்பான வழக்கு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சில ஆண்டுகள் நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

வடவள்ளியை சேர்ந்த தியாகராஜனிடம் ரூ.28 லட்சம், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் இடம் இருந்து 5 லட்சத்திற்கு மேல் வாங்கிக் கொண்டு மோசடி செய்தது உறுதியாகியுள்ளது. இதனால் சரிதா நாயர், அவரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கோவை 6வது குற்றவியல் நீதிமன்றம் இன்று தண்டனை விவரத்தை வழங்கியது. இதில் சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை மடற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Kerala Saritha Nair
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment