செயற்கைக் கோள் தரவு மற்றும் வெப்ப உணர்திறன் பயன்படுத்தி நிலத்தடி நீர் கசிவைக் கண்டறிவது முதல் செயலிழந்த போர்வெல்களை புதுப்பிக்க ரோபோக்களை அனுப்புவது வரை, 76 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (AMRUT) 2.0 திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு 35 நகரங்களில் நீர் பாதுகாப்பு இலக்குகளை நோக்கி செயல்படத் தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் "இந்தியா வாட்டர் பிட்ச்-பைலட்-ஸ்கேல் ஸ்டார்ட்-அப் சேலஞ்ச்" திட்டம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரி (ASCI) உடன் இணைந்து, செப்டம்பர் 2022 இல் 76 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நகரம், முனிசிபல் கார்ப்பரேஷன்கள், நீர் வாரியங்களுடன் இணைந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ASCI இல் உள்ள நகர்ப்புற ஆளுமை, சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் வி. ஸ்ரீனிவாஸ் சாரி, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இப்போது பணிகளைத் தொடங்கியுள்ளன. மழைக் காலத்தில் பணிகளின் முடிவுகள் தெரிய வரும் என்றார். திட்டத்தின் இரண்டாவது சுற்று சமீபத்தில் நிறைவடைந்ததாகவும் மேலும் 30 ஸ்டார்ட் அப்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
"இந்த திட்டங்கள் இப்போது செயல்படுத்துவதற்கான மேம்பட்ட கட்டத்தில் உள்ளன," என்று பேராசிரியர் சாரி கூறினார்.
ஸ்டார்ட்-அப்களில் ஒன்றான Aumsat டெக்னாலஜிஸ், உதய்பூருக்கு செயற்கைக் கோள் அடிப்படையிலான கசிவு மேலாண்மை அமைப்புடன் வந்துள்ளது. ASCI இன் எழுத்துப்பூர்வ அறிக்கையின்படி, ஜெய்சாமந்த் ஏரியிலிருந்து படேல் வட்டம் வரையிலான 50 கிமீ நீளமுள்ள நீர்க் குழாய்களில் செயற்கைக்கோள் ரேடார் பகுப்பாய்வு மூலம், அது 47 கசிவுகளைக் கண்டறிந்துள்ளது. இதை பிளக்கிங் செய்வதன் மூலம் 36,984 கேலன்கள் மற்றும் மாதத்திற்கு ரூ. 80 லட்சம் சேமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லத்தூரில் ஊர்த்வம் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் பழுதடைந்த மற்றும் வறண்ட ஆழ்துளை கிணறுகளை புதுப்பிக்க, "போர் சார்ஜர்" எனப்படும் காப்புரிமை பெற்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன. குழாயின் உறைக்கு கீழே கேமராவை அனுப்பிய பிறகு, அது ஒரு ரோபோ கையைப் பயன்படுத்தி வெவ்வேறு ஆழங்களில் இருந்து தண்ணீரை ஊடுருவ அனுமதிக்க உறைக்குள் துளைகளை உருவாக்குகிறது. ASCI படி, லத்தூர் நகரில் குறைந்த மகசூல் தரக்கூடிய அல்லது உலர்ந்த போர்வெல்கள் 300 இதுபோன்று மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இவை ஆண்டுக்கு 20.6 கோடி லிட்டர் ரீசார்ஜ் செய்யக்கூடியவை.
டெல்லியில், ரெட்டாஸ் என்விரோ சொல்யூஷன்ஸ், டெல்லி ஜல் போர்டுடன் இணைந்து சிமெண்டிற்கு மாறாக மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிப்ரொப்பிலீன் தொட்டிகள் உட்பட மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைக்க, ASCI தெரிவித்துள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, சவால்களில் ஒன்று என்னவென்றால், நகரங்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது கடினம், ஏனெனில் அவற்றின் டெண்டர் செயல்முறைக்கு ஒப்பந்ததாரருக்கு முன் அனுபவம் தேவை, இது பல ஸ்டார்ட்-அப்களுக்கு இல்லை என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“