லடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்

லடாக்கில் உள்ள பங்காங் சோ பகுதியின் தெளிவான செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செயததில் சீனர்கள் தங்கள் மாற்றியமைத்துள்ளனர். சீனர்கள் அங்கே எல்லை அடையாளங்களை மாற்றி அமைத்ததோடு ஏரியின் குறுக்கே உள்ள விரல் குன்றுகளில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் கணிசமான கட்டமைப்புகளையும் கட்டியுள்ளனர்.

india china border satellite image, Pangong Tso satellite image, இந்தியா - சீனா எல்லை பிரச்னை, லடாக், நிலைகளை மாற்றி அமைத்த சீனா, செயற்கைக்கோள் புகைப்படம், india china military satellite image, Pangong bank, Chinese Status quo, India china standoff
india china border satellite image, Pangong Tso satellite image, இந்தியா – சீனா எல்லை பிரச்னை, லடாக், நிலைகளை மாற்றி அமைத்த சீனா, செயற்கைக்கோள் புகைப்படம், india china military satellite image, Pangong bank, Chinese Status quo, India china standoff

லடாக்கில் உள்ள பங்காங் சோ பகுதியின் தெளிவான செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செயததில் சீனர்கள் தங்கள் மாற்றியமைத்துள்ளனர். சீனர்கள் அங்கே எல்லை அடையாளங்களை மாற்றி அமைத்ததோடு ஏரியின் குறுக்கே உள்ள விரல் குன்றுகளில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் கணிசமான கட்டமைப்புகளையும் கட்டியுள்ளனர்.

2015 மற்றும் 2017 ஆண்டுகளுக்கு இடையில் பங்காங் சோவில் ஒரு இந்திய ராணுவ பட்டாலியன் அதிகாரியாக இருந்த கர்னல் எஸ் டின்னி, மே 27 முதல் செயற்கைக்கோள் படங்களை பார்த்த பிறகு அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “அந்த நிலைகள் நிச்சயமாக இதற்கு முன்பு இல்லை. இது விரல் 4 மற்றும் விரல் 8க்கு இடையில் நடக்கும் ஒரு சாதாரண விஷயம் அல்ல. இது சர்ச்சைக்குரிய பகுதியில் நிலை மாற்றம் என்று நாங்கள் அழைக்கிறோம்.” என்று கூறினார்.

சீனர்கள் கடந்த காலத்தில் இப்பகுதியில் கூடாரங்களை அமைதிருந்தார்கள். ஆனால், அவை இப்போது இல்லை. இது இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அவர் கூறினார். மேலும், இப்போது காணக்கூடிய கட்டமைப்புகளில், ஆயிரக்கணக்கான சீன துருப்புக்களை தங்க வைக்க முடியாது. ஆனால், நிச்சயமாக கணிசமான எண்ணிக்கையில் இடமளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

“இந்த நேரத்தில், கணிசமான எண்ணிக்கையில் கூடாரங்கள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. எத்தனை துருப்புக்கள் உள்ளன என்பதை ஒருவர் கண்டுபிடிக்க முடியாது. அவை அகற்றப்பட்டதா? என்பதை ஒருவர் உறுதியாக கூற முடியாது. இந்த மாதிரியான செயல்பாடு இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. எல்லா நிகழ்வுகளைப்போல, ராணுவ ஜெனரல்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இதுவும் அகற்றப்படும். வேறு எதையும் எங்கள் பக்கம் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நான் காணவில்லை” என்று டின்னி கூறினார்.

பிளானட் லேப்ஸ் செயற்கைக்கோளில் மே 27ம் தேதி எடுக்கப்பட்ட படங்கள், அங்கே டஜன் கணக்கான புதிய கட்டமைப்புகளைக் காட்டுகின்றன. அவை பெரும்பாலும் கூடாரங்களாக இருக்கின்றன. அவை பங்காங் சோ வடக்குக் கரையில் நிலை 8 மற்றும் நிலை 4க்கு இடையில் உள்ளன. இது தற்போதைய நிலைப்பாட்டில் உள்ள முக்கிய சர்ச்சைகளில் ஒன்றாகும்.

மலைகள் ஏரிக்குள் விரல்களைப் போல நீண்டு குன்றுகளாக மேற்கிலிருந்து கிழக்கே 1 முதல் 8 வரை எண்ணப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, எல்லைக்கட்டுப்பாட்டு கோடு விரல்(குன்று) 8 இல் உள்ளது. ஆனால் சீனா விரல் 4ஐ எல்லையாக சுட்டிக்காட்டுகிறது.

விரல் 4க்கும் விரல் 8க்கும் இடையிலான தூரம் சுமார் 8 கி.மீ. ஆகும். அதனால், இந்தியா கூறும் பகுதிக்குள் சீனர்கள் இப்போது 8 கி.மீ. வந்துள்ளனர்.

இந்தியாவுக்கு விரல் 3 மற்றும் விரல் 2க்கு இடையில் முறையான நிலை உள்ளது. மேலும், 3 மற்றும் விரல் 4க்கு இடையில் நிர்வாகத் தளம் உள்ளது. இது ரோந்து காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், சீனா விரல் 8இன் மறுபுறத்தில் ஒரு நிர்வாக தளத்தை கொண்டுள்ளது.

அங்கு தனது நிலைப்பாட்டை நினைவு கூர்ந்த டின்னி “விரல் 4 மற்றும் விரல் 8க்கு இடையில் எந்த கட்டுமானமும் இல்லை. நிரந்தர கட்டுமானம் இல்லை, கூடாரங்கள் கூட இல்லை.” என்று கூறினார்.

மே 27 முதல் சீனர்கள் கூடாரங்களை அகற்றியிருக்கிறார்களா என்பது குறித்து டின்னிக்குத் தெரியவில்லை என்றாலும், டெல்லி வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், சீனர்கள் இப்போது விரல் 4 வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய துருப்புக்களைத் தாண்டி செல்ல அனுமதிக்கவில்லை என்றும் கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Satellite images shows chinese changed status on pangong bank ladakh

Next Story
சுழல் விளக்கு கலாச்சாரத்துக்கு முடிவு… நாட்டில் உள்ள அனைவருமே ‘விஐபி-கள்’ தான்… வெங்கையா நாயுடு விளக்கம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express