தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் - போலீசார் மீது நடவடிக்கை?.

Custodial deaths in India : தமிழ்நாடு, மேற்குவங்கம், குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதுதொடர்பாக, ஒரு போலீசார் கூட குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை

Custodial deaths in India : தமிழ்நாடு, மேற்குவங்கம், குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதுதொடர்பாக, ஒரு போலீசார் கூட குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sathankulam, custodial deaths, thoothukudi, jeyaraj and felix death, sathankulam police station, custodial torture, police, action, convicts, tamilnadu, maharashtra, uttrapradesh

Sathankulam, custodial deaths, thoothukudi, jeyaraj and felix death, sathankulam police station, custodial torture, police, action, convicts, tamilnadu, maharashtra, uttrapradesh

இந்தியாவில் 2001 முதல் 2018ம் ஆண்டில் தேசிய அளவில் 1,700க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 26 போலீசார் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம், தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 2001 முதல் 2018ம் ஆண்டில் 1,727 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும்,இதுதொடர்பாக, 26 போலீசார் மட்டுமே தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் பல வழக்ககுகளின் விசாரணை இன்னுமும் நடந்துகொண்டு உள்ளது.

Advertisment
Advertisements

இந்த 1,727 மரணங்களில், போலீஸ் காவலில் மரணம், விசாரணையின் போது மரணம், நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு முன்பே மரணம் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது ஆகும். இந்த மரணங்கள் தொடர்பாக, இதுவரை 26 போலீசார் மட்டுமே தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.

2018ம் ஆண்டில் நிகழ்ந்த 70 மரணங்களில் 4.3 சதவீதம் மட்டுமேல போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது அவர்கள் நடத்திய தாக்குதலில் நிகழ்ந்த மரணங்களாக பதிவாகியுள்ளது. மற்ற மரணங்கள் எல்லாம், தற்கொலை மற்றும் சிகிச்சையின்போது நிகழ்ந்த மரணங்களாகவே பதிவாகியுள்ளன.

2001 முதல் 2018ம் ஆண்டில் போலீஸ் காவலில் இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையிலும், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு போலீஸ்காரர் கூட தண்டனைக்கு உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலகட்டத்தில், மட்டும், தமிழ்நாடு, மேற்குவங்கம், குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதுதொடர்பாக, ஒரு போலீசார் கூட குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காவல் மரணங்களை தவிர்த்து இந்த 2001 முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகள் போலீசார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் மீது 737 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு அதில் வெறும் 344 போலீசார் மட்டுமே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Police Custodial Murders

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: