Advertisment

சிஏஏ குறித்து சத்ய நாதெல்லா: இன்போசிஸ் சிஇஒ பதவிக்கு புலம்பெயர்ந்த பெங்காலி வரவேண்டும்

வங்கதேச நாட்டில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் இன்போசிஸ் நிருவனத்தின் அடுத்த  தலைமை நிர்வாக அதிகாரியாக வரவேண்டும் என்பதை தான் விரும்புகிறேன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Microsoft CEO Satya Nadella :எனது வாழ்க்கை இந்திய பன்முகத்தன்மையால் வடிவமைக்கப்படுகிறது

Microsoft CEO Satya stament on Citizendhip amendment Act

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா,'நாட்டில் நிலவும் நிலைமை வருத்தமளிக்கிறது' என்று தெரிவித்தார்.

Advertisment

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...

பஸ்ஃபீட் என்ற செய்தி நிறுவனத்திடம் சத்ய நாதெல்லா பேசுகையில், "நடக்கின்ற நிகழ்வுகள் குறித்து நான் வருத்துகிறேன்.... இது மோசமானது என்றும் நான் நினைக்கிறேன். வங்கதேச நாட்டில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர், இன்போசிஸ் நிருவனத்தின் அடுத்த  தலைமை நிர்வாக அதிகாரியாக வரவேண்டும் என்பதை தான் விரும்புகிறேன்"என்றார்.

 

இந்த கருத்துக்கள் வெளியான பின்பு, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் முதன்மை செயல் அதிகாரியின்  அறிக்கை என்ற ட்வீட்டை வெளியிட்டது: “ஒவ்வொரு நாடும் அதன் எல்லைகளை வரையறுத்து, தேத்தை பாதுகாத்து, அதற்கேற்ப குடியேற்றக் கொள்கையை அமைக்கும்.  ஜனநாயக நாடுகளில், மக்கள் மற்றும் அதன் அரசாங்கத்தின் இணக்கமான விவாதத்தின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்படும். இந்தியாவில் புலம் பெயர்ந்த ஒருவர் ஒரு வளமான ஸ்டார்ட்அப் உருவாக்க முயலும் அளவிற்கு, இந்திய சமுதாயத்திற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்த துடிக்கும் அளவிற்கு இந்தியா நாடு  அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் என்று தான் நம்புவதாக" அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

 

நாதெல்லாவின் அறிக்கைக்கு பதிலளித்த வரலாற்று  ஆசிரியர் ராமச்சந்திர குஹா, “சத்யா நாதெல்லா தனது கருத்தை  கூறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது சொந்த ஐடி முதன்மை செயல் அதிகாரி ஒருவருக்கு இது போன்ற கருத்துகளை பகிர  தைரியமும் ஞானமும் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் தங்கள் கருத்துகளை இனியாவது வெளிபடுத்தலாம்,”என்றார்.

இதற்கிடையில், எழுத்தாளரும் கட்டுரையாளருமான சதானந்த் துமே, “சத்ய நாதெல்லா இந்த பிரச்சினையைத் தொட்டதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  இந்தியாவின் குடியுரிமை திருத்தம் சட்டத்தை அவர் ஏற்கவில்லை என்பதில் எந்த  ஆச்சரியமும் இல்லை. மைக்ரோசாப்ட் போன்ற ஒரு வெற்றிகரமான நிறுவனம், அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் கொள்கையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது" என்றார்.

இந்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களினால்  குறைந்தது 26 இந்திய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அதிக மக்கள் உயிர் இழந்த மாநிலம் உத்தரபிரதேசம் . மாநிலம் முழுவதும் நடந்த பல்வேறு போராட்டங்களில் குறைந்தது 19 மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக, உத்தரபிரதேச அரசு 372 பேர் (அடையாளம் காணப்பட்ட 478 பேரில்) சேதங்களை மீட்க நோட்டீஸ்செய்துள்ளது.

இந்தச் சட்டத்திற்கு எதிரான நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களால்  கார்ப்பரேட் கம்பெனியிலும் சில தாக்ககங்கள் ஏற்பட்டுள்ளது

நாட்டின் மிகப்பெரிய வாட்ச் தயாரிப்பாளரான டைட்டன் கம்பெனி லிமிடெட்,டிசம்பர் மாதம் இரண்டாம் பாதியில் “அனைத்து பிரிவுகளிலும்” விற்பனை ஓரளவு குறைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. வடகிழக்கு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் போராட்டங்களால் டைட்டன் கடைகளை அவ்வப்போது மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.  நாட்டின் ரூ .8,000 கோடி கடிகார சந்தையை, பாதி அளவு டைட்டன் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Microsoft
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment