மைக்ரோசாப்ட் முதன்மை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் தந்தையும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பி.என்.யுகந்தர் வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு 80 வயது. பிரதமர் அலுவலகம் மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றிய ஓய்வுபெற்ற இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) அதிகாரி புக்காபுரம் நடெல்லா யுகந்தர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
1962 ஐ.ஏ.எஸ் பேட்சை சேர்ந்த பி.என்.யுகந்தர் பிரிக்கப்படாத ஆந்திரா மற்றும் மத்திய அரசாங்கத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது . சமூகத்தின் ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்ட பல திட்டங்களை செயல்படுத்தி அனைவரின் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் உயர் அதிகாரியாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) -ஐ அரசாங்கத்தின் (2004-09) போது ஒரு திட்ட ஆணைய உறுப்பினராக இருந்தார். மத்திய அரசிடமிருந்து நீர்நிலை மேம்பாட்டுக்கான பணப்புழக்கத்தை மாநில அரசின் மூலம் இல்லாமல் நேரடியாக அந்தந்த மாவட்டங்களுக்கே செல்லும் வழிகாட்டுதல்களை முன்வைத்த பெருமையும் இவருக்கு உண்டு.
2014 ஆம் ஆண்டில் அவரது மகன் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ ஆனபோது, பி.என்.யுகந்தர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஊடங்களில் தங்களின் முகங்களை காட்ட முன்வரவில்லை.
பி.என்.யுகந்தர் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர்,
பி.யு.யுகந்தர் இறுதி தகன நிகழ்வில் சத்தியானா நாதெல்லா கலந்து கொள்வாரா என்பது இன்னும் அதிகாராப் பூர்வமாகத் தெரியவில்லை