சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை கடுமையான அரசியல் விவாதத்தின் மையத்தில் உள்ள நிலையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய மருத்துவ பதிவுகள் ஜூன் மாதம் திகார் சிறையின் குளியலறையில் அவர் விழுந்ததைக் காட்டுகின்றன, இதன் காரணமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முதுகுவலிக்கு டிரான்ஸ்ஃபோராமினல் எபிடூரல் ஸ்டீராய்டு ஊசி (TFESI) வழங்க இரண்டு நடைமுறைகள் தேவைப்பட்டன. சத்யேந்தர் ஜெயின் சிறைக்குள் மசாஜ் செய்யும் வீடியோ வெளியான பிறகு, சமீபத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குறிப்பிடப்பட்ட இரண்டு "அறுவைசிகிச்சைகள்" இவை என்று தோன்றுகிறது.
"சிறையில் இருந்த காலத்தில், அவர் விழுந்து, அவரது முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. அவரது L5-S1 முதுகெலும்புகள் அல்லது L5-S1 வட்டு சேதமடைந்தது. அவரது மருத்துவ பதிவுகளின்படி, அவரது நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, அதன் மூலம் நரம்புத் தொகுதிகள் பொருத்தப்பட்டன. அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் போது, வழக்கமான பிசியோதெரபி தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்,” என்று மணீஷ் சிசோடியா கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள்: குஜராத் தேர்தல்; 7 பில்லியனர் வேட்பாளர்களில் 5 பேர் பா.ஜ.க, 2 பேர் காங்கிரஸ்
சத்யேந்தர் ஜெயின் மருத்துவ பதிவுகளின்படி, லோக் நாயக்கின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை மற்றும் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட மருத்துவ குழு உறுப்பினர்களால் அவருக்கு பிசியோதெரபி பரிந்துரைக்கப்பட்டது.
ஆவணங்களின்படி, குளியலறையில் விழுந்தப் பிறகு, சத்யேந்தர் ஜெயின் இடது கீழ் முதுகுவலி மற்றும் இயல்பாக இருக்க முடியாதது குறித்து புகார் செய்தார். ஜி.பி பந்தின் இருதயவியல் பிரிவில் மதிப்பீடு செய்த பிறகு, அவர் லோக் நாயக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், அங்கு மருத்துவ இயக்குநர் டாக்டர் சுரேஷ் குமார், எலும்பியல் துறையைச் சேர்ந்த டாக்டர் சுமித் அரோரா மற்றும் நுரையீரல் மருத்துவத் துறையைச் சேர்ந்த டாக்டர் ஷிப்ரா ஆனந்த் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட்டது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க மூன்று மருத்துவர்களும் மறுத்துவிட்டனர்.
சத்யேந்தர் ஜெயின் எம்.ஆர்.ஐ அறிக்கை கூறியது: “எல்5-எஸ்1 கம்ப்ரசிவ் ரேடிகுலோபதியுடன் முதுகுத்தண்டின் சிதைவு நோய் மற்றும் சி6-சி7 முதுகுத்தண்டில் வென்ட்ரல் திகல் சாக்கின் உள்தள்ளலுடன் பரவிய வட்டு வீக்கம். அவர் ஆரம்பத்தில் கடுமையான படுக்கை ஓய்வு மற்றும் பிசியோதெரபி பயிற்சிகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டார். எலும்பியல் குழுவின் ஆலோசனையின்படி மருத்துவ மேலாண்மை அவரது சிகிச்சையில் இணைக்கப்பட்டது. மருத்துவ பதிவுகள் இரண்டு நுரையீரல்களிலும், கழுத்துப்பகுதி ஸ்போண்டிலோசிஸிலும் பிந்தைய கொரோனா ஃபைப்ரோஸிஸை எடுத்துக்காட்டுகின்றன.
நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பி.என் பாண்டே தயாரித்த ஆகஸ்ட் 6 தேதியிட்ட லோக் நாயக் டிஸ்சார்ஜ் அறிக்கையில், “சத்யேந்தர் ஜெயினுக்கு மருந்து, நுரையீரல் மருத்துவம், எலும்பியல் மற்றும் உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றுடன் இணைந்து மருந்தியல் சிகிச்சை மற்றும் மருந்தியல் அல்லாத சிகிச்சை (பிசியோதெரபி, இடுப்பு மற்றும் கழுத்து பகுதி) வடிவில் ஒருங்கிணைந்த சிகிச்சை தொடங்கப்பட்டது.
"மருந்தியல் சிகிச்சையின் போதுமான பதில் மற்றும் வலியின் நிலைத்தன்மையின் காரணமாக, நோயாளி TFESI க்கு திட்டமிடப்பட்டார்" என்று அறிக்கை கூறுகிறது. இரண்டு நடைமுறைகளும் ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 3 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன.
இரண்டு வாரங்களுக்கு கடுமையான படுக்கை ஓய்வு, வழக்கமான பிசியோதெரபி, தூங்குவதற்கு கடினமான மெத்தையைப் பயன்படுத்துதல், கழுத்துப் பகுதி காலர் மற்றும் இடுப்பு பெல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துதல், பளு தூக்குதல் மற்றும் பயணம் செய்தல் உள்ளிட்ட பதட்டமான அசைவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்ட பின்னர் சத்யேந்தர் ஜெயின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மேலும், மத்திய சிறை மருந்தகத்தின் மூத்த மருத்துவ அதிகாரி அலுவலகம் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு ஆகஸ்ட் 16 அன்று சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: “கைதி/நோயாளி இரண்டு நுரையீரல்களிலும் கோவிட்-19 க்கு பிந்தைய ஃபைப்ரோஸிஸ், தூக்கத்தில் மூச்சுத்திணறல், உடல் பருமன், ஹைபோக்ஸியா தூண்டப்பட்ட இதயத் துடிப்பில் அசாதாரண ஏற்ற இறக்கம், கழுத்துப் பகுதி ஸ்போண்டிலோசிஸ் மற்றும் ப்ரோலாப்ஸ்டு இன்டர்வெர்டெபிரல் டிஸ்க் நோய் (PIVD)… அழுத்த ரேடிகுலோபதியுடன் உள்ளார். அவர் சிறை மருத்துவர்கள், சிறைக்கு வருகை தரும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஜி.பி பந்த் மருத்துவமனை (இருதயவியல் துறை) மற்றும் லோக் நாயக் மருத்துவமனை (மருத்துவம், நுரையீரல் மருத்துவம், எலும்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை) ஆகியோரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.”
திகார் சிறை செய்தித் தொடர்பாளர் தீரஜ் மாத்தூர் கருத்து கிடைக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.