Saudi Arabia looking at $100-billion investment in India: இந்தியா பொருளாதாரத்தில் சரிவை சந்தித்துவரும் நிலையில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, நாட்டின் வளர்ச்சித் திறனைக் கருத்தில் கொண்டு பெட்ரோகெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு மற்றும் சுரங்கத் துறைகளில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.
சவுதி தூதர் டாக்டர் சவுத் பின் முகமது அல் சதி, பி.டி.ஐ-க்கு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எண்ணெய், எரிவாயு மற்றும் சுரங்க போன்ற முக்கிய துறைகளில் புதுடில்லியுடன் நீண்டகால கூட்டாண்மைகளை அரபு நாடு கவனித்து வருவதாக தெரிவித்தார். மேலும், “சவூதி அரேபியா இந்தியாவில் 100 பில்லியன் டாலர் மதிப்பில் எரிசக்தி, சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு, விவசாயம், தாதுக்கள் மற்றும் சுரங்கத் துறைகளில் முதலீடு செய்ய விரும்புகிறது” என்று அல் சதி கூறினார்.
இது நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டணியின் பின்னணியில் வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் எரிசக்தி உறவுகளின் மூலோபாய தன்மையை பிரதிபலிக்கிறது. “மகாராஷ்டிராவில் 44 பில்லியன் டாலர் மேற்கு கடற்கரை சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டம் போன்ற இந்தியாவின் எரிசக்தி துறையில் சவுதி அரம்கோ முன்மொழிந்த முதலீடுகள் மற்றும் ரிலையன்ஸ் உடனான நீண்டகால கூட்டாண்மை ஆகியவை எங்கள் இருதரப்பு உறவில் முக்கிய கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன” என்று அல்சதி கூறினார்.
சவுதி அரேபியா இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பின் முக்கிய தூணாகும். இது 17 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் இந்தியாவின் 32 சதவீத எல்பிஜி தேவைகளின் மூலமாக உள்ளது.
இதனிடையே சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானின் 2030 பார்வை இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகம் மற்றும் வணிகத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்று சவுதி தூதர் அல் சதி கூறினார். கூட்டு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கான 40-க்கும் மேற்பட்ட வாய்ப்புகள் 2019 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போதைய 34 பில்லியன் அமெரிக்க டாலர் இருதரப்பு வர்த்தகம் சந்தேகத்திற்கு இடமின்றி தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
“வர்த்தக வர்த்தகத்தில், குறிப்பாக எண்ணெய் அல்லாத வர்த்தகத்தில் பயன்படுத்தப்படாத பெரிய சாத்தியங்கள் உள்ளன. மேலும் நாங்கள் பொருளாதார, வணிக, முதலீடு, கலாச்சார மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறோம்” என்று அல் சதி குறிப்பிட்டார்.
“ஒரு துடிப்பான சமுதாயத்தையும், செழிப்பான பொருளாதாரத்தையும், ஒரு லட்சிய தேசத்தையும் கட்டியெழுப்புவது என்ற ராஜ்யத்தின் முழு வளர்ச்சி உத்தியாக மூன்று தூண்கள் உள்ளன.” என்று அவர் கூறினார். மேலும் “உலக வங்கியும் ஜி 20 நாடுகளுக்குள்க்குள் நான்காவது பெரிய சீர்திருத்தவாதியாக அரசை மதிப்பிட்டுள்ளது. 2018 முதல் காலாண்டில் சவுதி அரேபியாவில் வழங்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு உரிமங்களின் எண்ணிக்கை 130 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று அல் சதி கூறினார்.