Advertisment

கச்சா எண்ணை விலை சரிவு: ஏற்றம் பெறுமா இந்திய பொருளாதாரம் ?

உலகளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்தாலும், தங்களது உற்பத்தியை குறைக்கப்போவதில்லை என்று சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கச்சா எண்ணை விலை சரிவு: ஏற்றம் பெறுமா இந்திய பொருளாதாரம் ?

கச்சா எண்ணெய் விலை சில நாட்களாக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. 1991 வளைகுடாப் போருக்குப் பிறகு,  தற்போதுதான் இந்த அளவிற்கு விலை சரிந்துள்ளது. உதாரணமாக, கடந்த வெள்ளி -திங்கள் ஆகிய நாட்களில் ஒரு பீப்பாய் வெறும் 33 டாலருக்கு விற்கப்பட்டது. அதாவது, 33 சதவீதம் வீழ்ச்சி.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்று நோயால்  உலகளவில் உற்பத்தி மந்தமானதை அடுத்து, கச்சா எண்ணெய்யின் தேவையும் குறைகின்றன. இதனால், கச்ச எண்ணெய் விலை சரிவு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக் ) கடந்த வாரம், கச்சா எண்ணெய் விநியோகத்தைக் குறைப்பது தொடர்பான ரஷ்யாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதன் விளைவாக, சவூதி அரேபியா தனது ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ விற்பனை விலையை ஒரு பீப்பாய்க்கு 6 முதல் 8 டாலர் வரை குறைத்து நிர்ணயித்தது. இந்த  காரணத்தால் உலகவில் தற்போது கச்சா எண்ணெய் விலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்தாலும், தங்களது உற்பத்தியை குறைக்கப்போவதில்லை என்று சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் தெரிவித்துள்ளன.

இந்திய பொருளாதாரம்:  

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, உலகளாவிய பொருளாதாரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம், போன்றவைகளுக்கு மத்தியில் கச்சா எண்ணையின் விலை சரிவு இந்தியாவிற்கு மிகவும் சாதகாமாக கருதப்படுகிறது. ஏனெனில், இந்தியா தனது 80% கச்சா எண்ணையை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி மூலம் தான் பெறுகிறது.

Silver lining: Sharpest oil slump since 1991 may help ease pressure on deficit

மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா திங்களன்று தனது ட்விட்டரில், “முதலில், இது ஒரு உலகளாவிய பொருளாதரா நெருக்கடி என்பது போல் தோன்றுகிறது. இந்த நெருக்கடியை இந்தியா வீணாக்கக்கூடாது. பயன்படுத்தக்கூடிய மூன்று வாய்ப்புகள்

அ) கச்சா எண்ணையை விலை சரிவை பயன்படுத்தி, நாட்டு மக்களின் நுகர்வு திறனை மத்திய அரசு அதிகரிக்கலாம்

ஆ) கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் தூய்மை இயக்கம்  ஆகியவற்றை முடுக்கிவிடுங்கள்,சுற்றுலாப் பயணிகளை இந்தியாவிற்குள் ஈர்க்கும் (சீனாவுக்கு மாற்றாக).

c) முதலீட்டாளர்களுக்கான சலுகைகளை முடுக்கி விடுங்கள்,  விதிமுறைகளை விலக்குங்கள், சீனாவுக்கு மாற்று உற்பத்தி தளங்களை முதலீட்டாளர்கள் தற்போது தேடுகின்றனர், என்று தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோட்டக் தனது ட்விட்டரில்:  “எண்ணெய் / 45 / .... ஒரு  பீப்பாய்க்கு $ 20 சரிவதால், இந்தியா ஆண்டிற்கு  30 பில்லியன் டாலரை வரை மிச்சப்படுத்த முடியும். உலகளாவிய வட்டி விகிதங்கள் சரிந்து வருவதால், பணமும் மலிவான விலையில் கிடைக்கின்றன. வளர்ச்சியை அதிகரிப்பதற்கான கொள்கைக்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.” என்று பதிவு செய்திருந்தார்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் சில பின்னைடைவுகளும் உள்ளன."உலகளாவிய பொருளாதராம் மந்தநிலையை அடையும், இது  சந்தைகளுக்கு நல்லதல்ல. இதனால் அன்னிய நேரடி முதலீடு, போர்ட்ஃபோலியோ முதலீடு மற்றும் ரிமிட்டன்சைக் கூட குறைக்கும், ”என்று டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரர் டெபாசிஷ் மிஸ்ரா கூறுகிறார்.

கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 481.5 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Crude Oil Prices
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment