SBI blocking old ATM-cum-debit cards: SBI வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் கார்டுகளை, டிசம்பர் 31ம் தேதிக்குள், ஈஎம்வி சிப் கொண்ட கார்டுகளாக மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்களது ஏடிஎம் கார்டுகள் ரத்து ஆகிவிடும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், மற்ற வங்கிகளை காட்டிலும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில், மக்கள் பணபரிவர்த்தனைகளுக்கு ஏடிஎம் கம் டெபிட் கார்டு, நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, பேடிஎம், போன்பி உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திவருகின்றனர்.
ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் மெஷினில் இருந்து பணத்தை மட்டும் பெற்றுவந்த காலம் எல்லாம் மலையேறிபோய் விட்டது. எந்த இடத்திலும், எந்தவொரு பொருளை வாங்கினாலும் எளிதாக ஏடிஎம் கார்டை ஸ்வைப் மிஷினில் தேய்ப்பதன் மூலம், அந்த பொருளை எளிதால் நம்மால் பெற முடிகிறது.
மேக்னெடிவ் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம்கள் புழக்கத்தில் இருந்த நிலையில், அதிகளவில் மோசடி நிகழ்வுகள் நடைபெற்றதையடுத்து பாதுகாப்பு கருதி ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, வங்கிகள் ஈஎம்வி சிப் கொண்ட ஏடிஎம் கார்டுகளை அறிமுகப்படுத்தின. இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம், ஏடிஎம் தொடர்பான மோசடிகள் பெருமளவில் குறைந்துள்ளன.
மேக்னெடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம்களை பயன்படுத்தி வரும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், வரும் 31ம் தேதிக்குள் தங்கள் ஏடிஎம் கார்டுகளை சிப் கொண்ட கார்டுகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். 2020 ஜனவரியில் சிப் கொண்ட கார்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். மற்ற கார்டுகள், ரத்து செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது.
அருகில் உள்ள வங்கி கிளையிலோ அல்லது நெட்பேங்கிங் மூலமாகவோ, புதிய சிப் கொண்ட கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கி கணக்குடன் பான் எண் அல்லது படிவம் 60 இணைக்காதவர்களின் கணக்குகள் ரத்து செய்யப்பட்டு வருவதாகவும் வங்கி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Sbi debit card will be blocked at bank atm after december 31st
ராமஜென்ம பூமி நன்கொடை: ரூ. 11,000 வழங்கிய திமுக எம்.எல்.ஏ மஸ்தான்
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : 50 தொகுதிகள் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம்!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!