/tamil-ie/media/media_files/uploads/2018/03/a558.jpg)
தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கருணைக் கொலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், "மனிதர்களுக்கு கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு. அதனால் தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம். மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாத மீளமுடியாத நோயினால் தவிப்பவர்கள் மரணிக்க அனுமதிக்கலாம்.
Supreme Court allows advance directive (living will) and passive euthanasia. Advance Directive lets a person decide in advance whether or not to be put on life support in case of terminal illness. Court also lays down guidelines on how it can be executed @IndianExpress
— Ananthakrishnan G (@axidentaljourno) 9 March 2018
தன்மானத்துடன் இறப்பது மனிதரின் அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில், கருணைக் கொலை மற்றும் வாழும்போதே தன் உயிர் தொடர்பான உயில் எழுதி வைக்கும் நடைமுறை சட்டப்படி செல்லும் என தீர்ப்பு அளித்துள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
More Details Awaited...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.