ஓய்வுபெற்ற பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை புதிய தேர்தல் ஆணையராக சமீபத்தில் நியமித்தது தொடர்பான கோப்புகளை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (நவ.23) மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது,
தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு சுயாதீனமான பொறிமுறையைக் கோரும் மனுக்களை விசாரித்துவரும் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கு விசாரணையின்போது நியமனம் வழங்கப்படாமல் இருந்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும் என்று கூறியது.
கோயல் நியமனம் தொடர்பான கோப்புகளை வியாழக்கிழமை கொண்டு வருமாறு அட்டர்னி ஜெனரலை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
“ஏனென்றால் இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கத் தொடங்கிய பிறகு இந்த நியமனம் செய்யப்பட்டது என்று மேற்கோள் காட்டி நீதிமன்றம் கூறியுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண், கோயலுக்கு கடந்த வியாழக்கிழமை அன்று தன்னார்வ ஓய்வு பணி (விஆர்எஸ்) வழங்கப்பட்டு, அவருக்கு பணி நியமன ஆணை நவம்பர் 21ஆம் தேதி வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
மேலும், அருண் கோயலின் சமீபத்திய நியமனம், அவருக்கு விருப்ப ஓய்வு அளித்ததன் மூலம் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் ஓய்வு பெற்றவர்கள்.
ஆனால் அவர் அரசு செயலாளராக பதவி வகித்து வந்தார். வியாழக்கிழமை இந்த நீதிமன்றம் வாதங்களைக் கேட்டது. வெள்ளிக்கிழமை அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது.
அவரது பணி நியமன ஆணை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. திங்கட்கிழமை அவர் வேலை செய்யத் தொடங்கினார்” எனப் பூஷண் கூறினார்.
தொடர்ந்து, மே மாதம் முதல் அந்த பதவி காலியாக இருப்பதாகவும், பணி நியமனத்துக்கு எதிராக இடைக்கால உத்தரவை கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், விஆர்எஸ் விருப்ப ஓய்வு எடுக்க, ஒரு ஊழியருக்கு மூன்று மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதற்கு, கோயல் ஏதேனும் நோட்டீஸ் கொடுத்திருந்தால் தனக்கு சந்தேகம் இருப்பதாக பூஷண் கூறினார்.
இதற்கிடையில், இந்தியாவின் அட்வகேட் ஜெனரல் ஆர் வெங்கடரமணி, பூஷணின் கூற்றுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தார் மற்றும் கோயலின் நியமனத்திற்குப் பின்னால் எந்த வடிவமைப்பும் இல்லை என்றார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி ஜோசப், அட்டார்னி ஜெனரல் இந்த அதிகாரியை அழைத்து வந்த வழிமுறை என்ன? இந்த விவகாரம் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும் போது அதை செய்ய முடியுமா?
இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனத்திற்கு எதிராக ஒரு விண்ணப்பம் இருக்கும்போது, அந்த விவகாரம் அரசியல் சாசன பெஞ்சில் விசாரிக்கப்படும்போது, அது மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை என்றும் நீதிபதி ஜோசப் கூறினார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரை அந்தப் பதவிக்கு நியமித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, திங்களன்று கோயல் தேர்தல் ஆணையர் (EC) பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil