Aam Aadmi Party | Arvind Kejriwal | டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் குறித்த கேள்விக்கு பதிலளிக்குமாறு அமலாக்க இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்.30,2024) உத்தரவிட்டது.
அப்போது, “வாழ்வும் சுதந்திரமும் மிக முக்கியமானவை. நீங்கள் அதை மறுக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் மேற்கொள் காட்டியுள்ளது.
இதற்கிடையில் சிறைச் சாலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா சந்தித்துப் பேசினார். முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க மறுப்பதாக ஆம் ஆத்மி நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர்.
அவதூறு வழக்கு
இதற்கிடையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி ஆகியோர் மீது டெல்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
அவர்கள் பாஜக மற்றும் அதன் தலைவர்களை அவதூறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டடு அவதூறு வழக்கு பதிய கோரப்பட்டது.
இது குறித்து, டெல்லி பாஜகவின் ஊடகத் தலைவர் பிரவீன் ஷங்கர் கபூர் அளித்த புகாரில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் இருவரும் "பொய்யான அறிக்கைகளை வெளியிட்டனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை பாஜக வேட்டையாட முயன்றதாகவும், ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாகவும் கூறினர்” எனத் தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Delhi News Live Updates: SC asks ED to respond on Kejriwal’s arrest ‘timing’, says liberty ‘exceedingly important’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“