Advertisment

கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க சட்டப்படி அதிகாரம் உள்ளதா? குஜராத் காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

‘மக்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க உங்களுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளதா?’ குஜராத் போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

author-image
WebDesk
New Update
gujarat police

குற்றம்சாட்டப்பட்ட 4 முஸ்லீம் ஆண்களை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த குஜராத் காவல்துறை; உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள உந்தேலாவில் நடந்த கர்பா நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நான்கு முஸ்லீம் ஆண்களை சரமாரியாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரிகளிடம் உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று கேள்வி எழுப்பியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: SC asks Gujarat cops: ‘So you have an authority under law to tie people to poles and beat them?’

"அப்படியென்றால் மக்களைக் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க உங்களுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளதா?" என நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 14 நாட்கள் சிறைத்தண்டனை விதித்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.

காவல்துறை அதிகாரிகள் மேல்முறையீடு செய்ய 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி வழங்கிய உத்தரவை மூன்று மாதங்களுக்கு நிறைவேற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

காவலர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, நீதிபதி சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு முன்பு அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறினார்.

சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கிரிமினல் வழக்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்வதாகவும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இந்த விஷயத்தை கவனித்து வருவதாகவும் சித்தார்த் தவே கூறினார்.

இந்த சம்பவத்தின் மீது நீதிமன்றத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், நீதிபதி சந்தீப் மேத்தா, "என்ன மாதிரியான அட்டூழியங்கள்!... மக்களைக் கம்பங்களில் கட்டிவைப்பது, பொதுப் பார்வையில் அவர்களை அடிப்பது" என்று கோபமாக கூறினார்.

டி.கே.பாசுவின் தீர்ப்புக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இல்லை என்று சித்தார்த் தவே கூறியதற்கு, நீதிபதி கவாய், சட்டத்தை அறியாமல் இருப்பது சரியான தற்காப்பாக இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

"அப்படியானால், சட்டத்தை அறியாமல் இருப்பது சரியா?" என்று கேட்ட நீதிபதி கவாய், "டி.கே. பாசுவின் சட்டம் என்ன என்பதை அறிந்து கொள்வது ஒவ்வொரு காவல்துறை அதிகாரியின் கடமை" என்றும் கூறினார். சட்டக்கல்லூரி மாணவர்களாக இருந்த காலத்தில் இருந்து, டி.கே.பாசுவைப் பற்றி கேள்விப்பட்டு வருகிறோம், என்றும் நீதிபதி கவாய் கூறினார்.

24 மணி நேரத்திற்கும் மேலாக ஆண்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருப்பது விசாரணைக்கு உட்பட்டது மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்டதாக இருக்க முடியாது என்று சித்தார்த் தவே வாதிட்டார்.

சட்டரீதியான மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட பெஞ்ச், உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நிறுத்தி வைத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment