PTI
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மாவட்ட நீதிபதிகள் 4 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரின் பெயர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது.
இதையும் படியுங்கள்: பீகார் தொழிலாளர்கள் தாக்குதல் போலி வீடியோ; கைதான யூடியூபர் மணீஷ் காஷ்யப் அரசியல் லட்சியம் கொண்டவர்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நான்கு நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க 2022 ஆகஸ்ட் 10 அன்று உயர் நீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரைக்கு தமிழக முதல்வர் மற்றும் ஆளுநரின் ஒப்புதல் உள்ளது என்று மார்ச் 21 தேதியிட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோப்பு ஜனவரி 5, 2023 அன்று நீதித்துறையிடம் இருந்து பெறப்பட்டது.
"உயர்நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவதற்கு மேற்கூறிய பெயரிடப்பட்ட நீதித்துறை அதிகாரிகளின் தகுதியைக் கண்டறியும் பொருட்டு, நடைமுறைக் குறிப்பின் அடிப்படையில், இந்த கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்ற விவகாரங்களை அறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் ஆலோசனை நடத்தியது,” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு தீர்மானத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் ஹர்பிரீத் சிங் ப்ராரை நியமிப்பதற்கான தனது முந்தைய பரிந்துரையை ஜூலை 25, 2022 தேதியிட்ட கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil