Supreme Court Of India | Haryana Election | சண்டிகர் மாநகராட்சியின் மேயர் பதவிக்கான ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியின் கூட்டு வேட்பாளரான குல்தீப் குமார் வெற்றிப் பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை வாக்குச் சீட்டுகளை ஆய்வு செய்த இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தலைமை அதிகாரி அனில் மசிஹ் குறியிட்ட 8 வாக்குச் சீட்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவித்தது.
மேலும் நீதிபதிகள், ஜனவரி 30ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட முடிவுகள் சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளித்தனர். தொடர்ந்து அதில், “அத்தகைய வழக்கில், இந்த நீதிமன்றம், குறிப்பாக அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, தேர்தல் ஜனநாயகத்தின் செயல்முறையை உறுதிப்படுத்துவதற்கு முழுமையான நீதியை வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்.
இத்தகைய சூழ்ச்சிகளால் முறியடிக்க அனுமதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையை அனுமதிப்பது, நமது நாட்டில் ஜனநாயகத்தின் முழு கட்டிடமும் சார்ந்து இருக்கும் மிகவும் மதிப்புமிக்க கொள்கைகளை அழித்துவிடும்.
எனவே, உள்ளூர் பங்கேற்பு மட்டத்தில் இருந்தாலும், தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை ஆணையைப் பாதுகாக்க, இதுபோன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.
மேலும், “நாங்கள் முன்பு வெளியிட்ட முடிவுத் தாளில் இருந்து, மனுதாரர் 12 வாக்குகளைப் பெற்றதாகப் பிரதிபலிக்கும் போது, செல்லாததாகக் கருதப்பட்ட எட்டு வாக்குகள் தவறாகக் கருதப்பட்டன என்பது வெளிப்பட்டுள்ளது. அந்த எட்டு செல்லாத வாக்குகள் ஒவ்வொன்றும் உண்மையில் செல்லுபடியாகும், மனுதாரருக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டன. மனுதாரர் பெற்றதாக தலைமை அதிகாரி பதிவு செய்த 12 வாக்குகளுடன் செல்லாத எட்டு வாக்குகளையும் சேர்த்தால் அவரது எண்ணிக்கை 20 ஆகிவிடும்” எனத் தெரிவித்தனர்.
மறுபுறம், எட்டாவது பிரதிவாதி 16 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன்படி, தலைமை அதிகாரியால் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
தலைமை அதிகாரியான அனில் மசிஹ்வின் பங்கை குறைத்து கூறிய உச்சநீதிமன்றம், “ஒவ்வொரு வாக்குச்சீட்டிலும் மனுதாரருக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது” என்று கூறியது.
இதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
ஆங்கிலத்தில் வாசிக்க : SC declares AAP’s Kuldeep Kumar Chandigarh mayor, directs to issue notice to presiding officer Anil Masih
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“