/indian-express-tamil/media/media_files/2025/05/19/Km5Cti9XmGAerZBOWmWP.jpg)
உச்ச நீதிமன்றம் திங்களன்று, கர்னல் சோஃபியா குரேஷி குறித்த தனது கருத்துகளுக்காக மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த மன்னிப்பை நிராகரித்தது. இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைக்கவும் உத்தரவிட்டது. குழு மே 28ஆம் தேதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை அவரது கைதுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த வாரம் அவர் தெரிவித்த கருத்துகளுக்காக "உங்கள் அறிக்கையால் நாடு முழுவதும் அவமானத்தில் மூழ்கியுள்ளது" என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் அவரை கடிந்துகொண்டது. தரமற்ற கருத்துகளை தெரிவிப்பதற்கு முன்பு அவர் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.
அவரது மன்னிப்பை கேள்வி எழுப்பிய நீதிமன்றம், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அவர் "முதலை கண்ணீர்" வடிக்கிறாரா என்றும் கேட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
கடந்த வாரம், மஹோவ் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷா, "இந்தியாவின் மகள்களை விதவைகளாக்கியவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த சகோதரியை வைத்தே பாடம் புகட்டினார்" என்று கூறினார். இந்த அறிக்கையை அவர் மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினார். அவர் யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருந்தபோது ஊடகங்களுக்கு விளக்கமளித்த கர்னல் சோஃபியா குரேஷியை அவர் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மத்தியப் பிரதேச டிஜிபி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குள் ஐஜி அந்தஸ்துள்ள அதிகாரி தலைமையில் SIT-ஐ அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SIT குழுவில் மத்தியப் பிரதேச கேடரைச் சேர்ந்த மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும், அதில் ஒரு பெண் அதிகாரியும் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த அதிகாரிகள் யாரும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் அது மேலும் கூறியுள்ளது.
இந்த வழக்கு மே 28ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.