Advertisment

சி.பி.ஐ. இயக்குநர்களின் பதவி காலம் - உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் - மனுதாரர் வேண்டுகோள்

சிபிஐயின் முன்னாள் இயக்குநர்கள் இந்த அவசரச் சட்டம் குறித்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
petitioner behind reforms in selection of CBI chief, SC

Ritu Sarin , Deeptiman Tiwary 

Advertisment

reforms in selection of CBI chief : மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் தலைவர்களை ஐந்தாண்டுகள் வரை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் அரசாணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 1997ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பில் மனுதாரர், சிபிஐக்கு "சுதந்திரம்" அளித்து இரண்டு ஆண்டுகள் வரை சி.பி.ஐ. இயக்குநர்களுக்கு பதவிக்காலம் வழங்கியது. ஆனால் தற்போது நீதிமன்றம் இதில் தலையிட்டு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

புலனாய்வு முகமைகளின் பிணைப்பை கேள்விக்குள்ளாக்கி 1993ம் ஆண்டு மனு தாக்கல் செய்த வினீத் நரைன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம், இப்போது மாண்புமிகு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை அறிந்து 1997ம் ஆண்டு வெளியிட்ட முந்தைய தீர்ப்பின் வெளிச்சத்தில் அதன் தகுதியை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறினார். உச்ச நீதிமன்றம் தலையிட்டு, சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநகரத்தில் எப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த விஷயத்தில் ஒரு அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் அதன் உரிமைகளை செயல்படுத்துகிறது. அவ்வாறு செய்வதற்கு முன் உச்ச நீதிமன்றத்தை அணுகி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தியிருக்க வேண்டும் என்றும் நரைன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் விவாதம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை மறுபரிசீலனை செய்ய அனுமதித்திருக்க வேண்டும் அரசாங்கம். இரண்டு புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களின் நிலையான 5 ஆண்டு பதவிக்காலம் குறித்து தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் அவர்களுக்கு ஒரு முறை நியமனமாக வழங்கப்பட வேண்டும் என்று நரைன் கூறினார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மிகவும் உணர்வுப்பூர்வமான அமைப்புகள். அவற்றை அன்றைய அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இயக்குநர்களுக்கு ஒரு சில மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு துண்டு துண்டாக பதவி நீட்டிப்புகளை வழங்குவது அவர்களை மிரட்டுவதற்கு வழிவகுக்கும், மேலும் இதன் மூலம் விசாரணை முகமைகளின் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று கூறிய நரைன், செயல்முறையை வெளிப்படைத்தன்மையுடன் வைத்திருக்க, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் பதவி காலம் தலைக்கு மேல் கத்தி போல் இல்லாமல் 5 ஆண்டு பதவிக் காலத்தை ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

சிபிஐயின் முன்னாள் இயக்குநர்கள் இந்த அவசரச் சட்டம் குறித்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். சிலர் இதை வரவேற்றாலும், மற்றவர்கள் இது ஏஜென்சிகளின் சுதந்திரத்தை சமரசம் செய்துவிடும் என்று கூறினர்.

நான் இதை வரவேற்கின்றேன். ஏன் என்றால் எஃப்.பி.ஐ. இயக்குநர்களின் பதவிகாலம் 10 ஆண்டுகள் ஆகும். அப்படி இருக்க, சமீபத்திய திருத்தங்கள் நிலையான ஐந்தாண்டு பதவி காலத்தை உறுதி செய்யவில்லை. குறைந்தபட்சம் இயக்குநர் வழக்குகளை விசாரித்து அதனை முடிவுக்கு கொண்டு வர உதவும். அனைத்து நீட்டிப்புகளும் பிரதமர் தலைமையிலான குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும், அங்கு தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் கருத்தும் இருக்க வேண்டும் என்று முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி. சிங் கூறினார்.

சி.பி.ஐ. இயக்குநர்களின் பதவிக்காலம் நிலையான ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று 2011ம் ஆண்டு நாடாளுமன்ற குழுக்களுக்கு பரிந்துரை செய்தவர் சிங். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா, 2011 பரிசீலனையின் போது, பாராளுமன்ற கமிட்டிகளால் அது நிராகரிக்கப்பட்டது.

ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு சி.பி.ஐ. இயக்குநர் தன்னுடைய மாற்றுக் கருத்தைக் கூறினார். “இந்த உத்தரவின் மூலம், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் முன்னாள் அரசாங்கம் ஒரு கேரட்டை தொங்க வைத்து, நீங்கள் குறிப்பிட்ட பாதையை நோக்கி நடந்தால் உங்களின் பதவிக்காலத்திற்கு மேலே நீட்டிப்பு கிடைக்கும். இது ஏஜென்சியின் சுதந்திரத்தை தீவிரமாக பாதிக்கலாம். ஒவ்வொரு இயக்குநரும் நீண்ட காலம் பணியில் இருக்க விரும்புவார்கள். முன்னதாக, ஓய்வுக்குப் பிந்தைய பணியைத் தேடாத ஒரு இயக்குநர், தனது பதவிக்காலம் முடிவதற்குள் நீக்கப்பட மாட்டார் என்பது அவருக்குத் தெரியும் என்பதால், அவர் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.

முன்னாள் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் எம்.எல். ஷர்மா இதனை ஒப்புக் கொண்டார். இதனை இரண்டு விதமாக பார்க்க இயலும். புலன் விசாரணை முகமைகளின் இயக்குநர்களுக்கு நீண்ட காலம் பதவியில் இருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் நீண்ட பதவிக்காலம் கொடுக்க விரும்பினால், அதை அவர்கள் சரி செய்திருக்க வேண்டும். ஆனால் ந்த பதவி காலத்தை நீட்டிப்பது stick-and-carrot கொள்கையை போன்றது. அவர்கள் கமிட்டி உறுப்பினர்களுக்கு முன்பாகவும் சிரம் பணிந்திருக்க வேண்டும். எந்த ஒரு அதிகாரியும் ஓய்வு பெற விரும்பவில்லை. இது மிகவும் நேர்மறையான நடவடிக்கையாக எனக்கு தோன்றவில்லை என்று அவர் கூறினார்.

இது அரசின் முன்னுரிமையாகும். அவர்களால் இரண்டு ஆண்டுகளுக்கு பதவிகளை வழங்க முடியும் என்றால் அவர்களால் அதற்கு அதிகமாகவும் செய்ய முடியும். முகமைகளை தலைமையேற்றும் நபர்களைப் பொறுத்து முகமை தன்னுடைய பொறுப்புகளை சமரசம் செய்து கொண்டதா என்பதை கூற முடியும் என்று முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் விஜய் ஷங்கர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment