உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை கோயில் கட்டுவதற்கு புதிய அறக்கட்டளைக்கு அளித்தும், மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடத்தை ஒதுக்க நவம்பர் 9, 2019-ல் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியத்திற்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை வழங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும், கட்டுமானப் பொறுப்பில் உள்ள அறக்கட்டளை அதிகாரிகளிடமிருந்து முக்கிய அனுமதியைப் பெறாததால், இந்த திட்டத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று அதிகாரிகளின் கூறுகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, நவம்பர் 9, 2019-ல் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை கோயில் கட்ட புதிய அறக்கட்டளைக்கு ஒதுக்கியது. மேலும், மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடத்தை ஒதுக்கி உத்தரவிட்டது. அதன்படி, 2020 ஜூலையில் தன்னிப்பூரில் ஒரு மசூதியைக் கட்டுவதற்காக உத்தரப் பிரதேச சன்னி வக்ஃப் வாரியம் இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையை (ஐ.ஐ.சி.எஃப்) அமைத்தது.
இந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டதற்கு, இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை (ஐ.ஐ.சி.எஃப்) செயலாளர் அதர் ஹுசைன் செவ்வாய்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “நாங்கள் அனுமதிக்கப்பட்ட இந்த திட்டத்தித்தை அதிகாரிகளிடம் இருந்து இன்னும் அனுமதி பெறவில்லை. வரைபடம் அதிகாரிகளால் அனுப்பப்படவில்லை. அனுமதி கிடைக்காத வரை கட்டுமானம் தொடங்க முடியாது. விவசாய நிலத்திலிருந்து நிறுவன நிலமாக நிலத்தின் தன்மை மாறியுள்ளதால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.” என்று கூறினார்.
மே 2021-ல், ஐ.ஐ.சி.எஃப்-ஆல் முன்மொழியப்பட்ட மசூதிக்கான மாதிரி வரைபடங்களை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பித்தது என்று ஹுசைன் கூறினார். ஆனால், “நாங்கள் அனுமதி பெறவில்லை” என்று அவர் கூறினார். “அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரான அயோத்தி பிரதேச ஆணையரிடம் இருந்து அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி என்றைக்கு வேண்டுமானாலும் வரலாம்” என்று கூறினார்.
இந்த திட்டத்தின் படி, ஐ.ஐ.சி.எஃப் மசூதி மற்றும் சமூக வசதிகளைக் கட்டும். இதில் ஒரு மருத்துவமனை, ஒரு சமூக சமையலறை, ஒரு காப்பகம்/அருங்காட்சியகம் அடங்கிய இந்தோ-இஸ்லாமிய கலாச்சார ஆராய்ச்சி மையம் ஆகியவை அடங்கி இருக்கும். இந்த திட்டத்துக்கு மருத்துவமனைக்கு ரூ.100 கோடி உட்பட ரூ.110 கோடி செலவாகும் என ஐ.ஐ.சி.எஃப் கணித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட நிலத்தின் நுழைவுப் புள்ளி 4.02 மீட்டர் மட்டுமே மற்றும் 9 மீட்டர் அகலத்தில் இருக்க வேண்டும் என்பதால், தீ பாதுகாப்புக்கான என்.ஓ.சி நிலுவையில் உள்ளது என்று ஹுசைன் கூறினார்.
நிலத்தின் தன்மை விவசாய நிலமாக இருந்து நிறுவன நிலமாக மாற்றப்படுவதைச் சுட்டிக்காட்டிய ஐ.ஐ.சி.எஃப் அதிகாரி, நிர்வாகம் இது குறித்தும், மற்ற பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கத்தை அணுகியுள்ளதாக கூறினார். “நிலுவையில் உள்ள அனைத்து அனுமதிகளும் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டியவை. அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை” என்று கூறினார்.
“நாங்கள் மசூதியின் கட்டுமானப் பணிகளை மிக விரைவில் தொடங்குவோம்” என்று ஹுசைன் கூறினார். “இந்த திட்டத்தின் (செலவு) 90 சதவீதத்தை உள்ளடக்கிய மருத்துவமனைக்கு, அவர்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் எங்களுக்கு உதவ சில கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகுவோம். இது (மருத்துவமனை) தொண்டு அடிப்படையில் நடத்தப்படும்…” என்று ஹுசைன் கூறினார்.
இதற்கிடையில், கோயில் கட்டுமானக் குழு, டிசம்பர் 2023-க்குள் தரைத்தள கர்ப்ப கிரஹம் கட்டுமானத்தை முடிக்க இலக்காகக் கொண்டுள்ளது. மீதமுள்ள பணிகள் டிசம்பர் 2024-க்குள் செய்யப்பட உள்ளது. 2024 தொடக்கத்தில், கோயில் பொதுமக்களுக்காக முன்கூட்டியே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அயோத்தி கோயில் கட்டுமானக் குழுவின் உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறியதாவது: கருவறையைச் சுற்றி கிட்டத்தட்ட 13 அடி கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. கருவறையின் கம்பங்கள் கிட்டத்தட்ட கட்டப்பட்டுவிட்டன; கோவிலை சுற்றி சுவர்கள் கட்டும் பணியும், நிரப்பும் பணியும் நடந்து வருகிறது. ஆறு மீட்டர் வரை தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பளிங்கு கற்களில் சுமார் 70 சதவீதம் வந்துள்ளன; மீதமுள்ளவை விரைவில் வந்து சேரும்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.