டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய மனுவை அவசர வழக்காக பட்டியலிட உச்ச நீதிமன்றம் இன்று (மே 29) புதன்கிழமை மறுத்துள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஜூன் 2-ம் தேதி மீண்டும் திகார் சிறைக்கு செல்ல வேண்டும்.
வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்திற்கு செல்ல முதலமைச்சருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால், மனுவை பராமரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற பதிவுத்துறை மனுவை ஏற்க மறுத்தது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மே 10-ம் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு பல்வேறு நிபந்தனைகளுடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்து இடைக்கால ஜாமீன் வழங்கினர். ஜூன் 2 ஆம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறையில் சரணடை வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
விண்ணப்பத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், இ.டியால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இடைக்கால ஜாமீனை நீட்டிப்பதற்கான கெஜ்ரிவாலின் மனுவுக்கும் முக்கிய மனுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/supreme-court-delhi-cm-arvind-kejriwal-bail-9358545/
கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனுவில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு 7 கிலோ எடை குறைந்ததாகவும், அவரது உடலில் கீட்டோன் அளவு அதிகமாக இருப்பதாகவும் கூறியிருந்தது.
"இவை சில தீவிர நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேக்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அவருக்கு PET-CT ஸ்கேன் மற்றும் பல பரிசோதனைகள் செய்ய வேண்டும். இதற்கு 7 நாட்கள் மேலும் அவகாசம் வேண்டும்” என்று ஆம் ஆத்மி கட்சி மனுவில் கேட்டுள்ளார்.
மே 10 அன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜூன் 1 வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர். உத்தரவின்படி, டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் ஜூன் 2 ஆம் தேதி சரணடைய வேண்டும் என்றும் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“