Advertisment

உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு.. முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்ன?

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு.. முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்ன?

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு (Economically weaker sections (EWS) from non-backward castes) கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103-வது அரசியலமைப்பு சட்ட திருத்ததை எதிர்த்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 27) ஒத்திவைத்தது.

Advertisment

2019இல் கொண்டுவரப்பட்ட இந்த சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு கடந்த 2020ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. செப்டம்பர் 8 அன்று உச்ச நீதிமன்றம் 3 பிரச்சினைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது. இந்த பிரச்சினைகள் என்ன?, ஒதுக்கீடு பற்றி நீதிமன்றத்தில் அரசாங்கம் என்ன கூறியது? எதிர்வாதம் என்ன? என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த 7 நாட்களாக இந்த வழக்கை தினசரி விசாரித்து வந்தன.

நீதிமன்றம் ஆய்வு செய்து வரும் சிக்கல்கள்

பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளை மாநிலத்தை அனுமதிப்பதன் மூலம் 103-வது அரசியலமைப்புத் திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகக் கூற முடியுமா

திருத்தம் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகக் கூறலாமா.. தனியார் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு மூலம் மாநில அரசு அனுமதி

EWS இடஒதுக்கீட்டின் வரம்பில் இருந்து SEBCகள் (சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர்) / OBCகள் (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) எஸ்சி, எஸ்டி ஆகியோரை தவிர்த்து அடிப்படை கட்டமைப்பு மீறப்படுகிறதா. உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்கிறது.

மத்திய அரசு வாதம்

மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், 103வது அரசியல் சட்டத் திருத்தம், பிற சாதியினருக்கும், மாநிலத்துக்கும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டிற்கு இடையூறு விளைவிக்காத வகையில், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை. பொதுப் பிரிவினரிடையே ஏழைகளை உயர்த்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தனர்.

செப்டம்பர் 27 நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில் மேலும் 2,14,766 இடங்கள் உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.4,315.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவித்தது. இதனால் மற்ற பிரிவினருக்கான ஒதுக்கீடுகள் பாதிக்கப்படாது என்று வாதிடப்பட்டது.

அதற்கு முன், செப்டம்பர் 21 அன்று வேணுகோபால் கூறுகையில், EWS ஒதுக்கீடு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளின் உரிமைகளை பறிக்காது என்று கூறினார். இந்த இடஒதுக்கீடு ஒரு புதிய பரிணாமமாகும். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளின் இடஒதுக்கீட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால், பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான வாதம்

அரசியலமைப்பில் உள்ள ஒதுக்கீடுகள், அவர்களின் சாதி அடையாளத்தின் காரணமாக, வரலாற்று ரீதியாக பின்தங்கியவர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிமுறையாகக் கருதப்பட்டதாகவும், வறுமை ஒழிப்புத் திட்டமாக அல்ல என்று பரவலாகக் கூறினர். சாதியும் அதன் துணை ஒடுக்குமுறையும் நிரந்தரமானது என்றும், தலைமுறை தலைமுறையாகக் கடந்து செல்வது என்றும், வறுமை தற்காலிகமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

செப்டம்பர் 13 அன்று, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான கல்வியாளர் ஜி மோகன் கோபால், "103வது திருத்தம் "சமூக நீதிக்கான அரசியலமைப்பு பார்வை மீதான தாக்குதல்" மற்றும் "அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி" என்று குறிப்பிட்டார். இந்த திருத்தம் அமல்படுத்தப்பட்டால், அதுவே சமவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும். சமவாய்ப்பை அழித்துவிடும்" என்று கூறினார்.

தொடர்ந்து கோபால் கூறுகையில், "சமத்துவம் என்பது பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களின் கோரிக்கை என்றும் மேல்தட்டு மக்களின் கோரிக்கை இல்லை என்று வாதிட்டார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டில் ஆர்வம் காட்டவில்லை; நாங்கள் பிரதிநிதித்துவத்தில் ஆர்வமாக உள்ளோம்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment