Apurva Vishwanath
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலீஜியம்) இரண்டாவது முறையாக ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் ஒருவரை நியமனம் செய்ய பரிந்துரை செய்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் தற்போது, உயர் நீதித்துறைக்கான நீதிபதிகளை நியமனம் செய்யும் செயல்முறையை நிர்வகிக்கும் இக்குழு மூன்றாவது முறையாக மெமோ ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மார்ச் மாதத்தில் நீதிபதிகள் தேர்வுக் குழு வழக்கறிஞர் சாதீக் வாசிம் நக்ரலை இரண்டாவது முறையாக பரிந்துரை செய்து அறிவித்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது. அரசாங்கத்தின் முன் நிலுவையில் உள்ள மிகப் பழமையான பரிந்துரை இது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்முவை சேர்ந்த நக்ரல் முன்னாள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் மூத்த கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். பெரும்பாலும் உள்துறை அமைச்சகத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மத்திய அரசின் ஆலோசகராக, அவர் உயர்நீதிமன்றத்தில் இராணுவம், பிஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி அன்று நக்ரலின் பெயரை முதன்முறையாக உயர் நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அவரது வேட்புமனு ஏப்ரல் 6, 2018 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து, 2019 ஜனவரி மாதம், இந்த ஆண்டு மார்ச் மாதம் என இரண்டு முறை தங்களின் பரிந்துரை குறித்து மீண்டும் வலியுறுத்தியது உச்ச நீதிமன்ற கொலீஜியம்.
வழக்கமாக, கொலீஜியம் ஒரு முடிவை மீண்டும் வலியுறுத்தினால் அதனை அரசு உடனடியாக ஏற்க வேண்டும்.
நக்ரலை தவிர உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மேலும் இருவரை பரிந்துரை செய்தது. இந்த முடிவும் இன்னும் நிலுவையில் உள்ளது. செப்டம்பர் 1ம் தேதி அன்று மோக்ஷா கஜூரியா கஸ்மி மற்றும் ராகுல் பாரதி ஆகியோரை நீதிபதிகளாக பரிந்துரை செய்து வலியுறுத்தப்பட்டது.
கஸ்மியின் பெயர் முதன்முறையாக 2019ம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது. பாரதியின் பெயர் இந்த ஆண்டு மார்ச் மாதம் பரிந்துரை செய்யப்பட்டது. 2016ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட ஆளுநர் ஆட்சியின் போது மூத்த கூடுதல் அட்வெகேட் ஜெனரலாக பணியாற்றினார். மெகபூபாவின் பி.டி.பி - பாஜக கூட்டணியின் போதும் அவர் அதே பணியை தொடர்ந்தார்.
கஜூரியா கஸ்மி மற்றும் பாரதியின் பெயர்கள் உச்சநீதிமன்ற கொலீஜியம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையில் செப்டம்பர் 1ம் தேதி அன்று வலியுறுத்தப்பட்ட 12 நபர்களில் அடங்கும்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு கொலீஜியம் ஓம் ப்ரகாஷ் திரிபாதி, உமேஷ் சந்திர ஷர்மா மற்றும் சையத் வைஸ் மியான் ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு ஃபர்ஸாந்த் அலியின் பெயரை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் அவர் கூடுதல் அட்வெகேட் ஜெனரலாக பணியாற்றினார். அக்டோபர் 11ம் தேதி அலியின் பெயர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவால், ஜூலை 2019க்கு பிறகு மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டு, அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு கொலீஜியம் வழக்கறிஞர்கள் ஜெய்தோஷ் மசூம்தர், அமிதேஷ் பானர்ஜீ, ராஜா பாசு சௌத்ரி மற்றும் லப்பிதா பானர்ஜீ ஆகியோர் பெயர்களை பரிந்துரை செய்தது. அக்டோபர் 8ம் தேதி அன்று சாக்யா சென் என்ற வழக்கறிஞரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரை செய்ததை மீண்டும் வலியுறுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil