பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரில் இட ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு செய்யும் நோக்கத்திற்காக உட்பிரிவை உருவாக்க அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில், காங்கிரஸ் கட்சியில் கடுமையாக கருத்து பிளவுபட்ட நிலையில், காங்கிரஸ் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும், அடுத்த 2-3 வாரங்களில், இந்த விஷயத்தில் தனது பார்வையை உறுதிப்படுத்துவதற்கு முன் கூடுதல் ஆலோசனைகளை நடத்தவும் செவ்வாய்கிழமை முடிவு செய்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: SC/ST sub-quota: As Dalit, other leaders oppose order, silent Congress holds off its call
தனிப்பட்ட முறையில் தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டாலும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து கட்சியின் மத்திய தலைமை மௌனம் சாதித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இறுதியாக தெளிவுபடுத்த செவ்வாயன்று ஒரு கூட்டத்தை நடத்தினார். மேலும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கட்சியின் சட்ட மற்றும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தலித் முகங்கள், காங்கிரஸின் கர்நாடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பெரும்பாலான தலித் தலைவர்கள் மற்றும் பிற உயர்மட்ட செல்வாக்கு மிக்க குரல்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சாய்ந்து, உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பதை ஆதரிப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், அக்கட்சியின் இரண்டு முதல்வர்கள் - கர்நாடகாவின் சித்தராமையா மற்றும் தெலங்கானாவின் ஏ ரேவந்த் ரெட்டி - உள்ளூர் அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக தீர்ப்பை ஏற்கனவே வரவேற்றுள்ளனர். கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் உள்ள முக்கிய எஸ்சி பிரிவு குழுக்களான மாலா மற்றும் மாதிகா சாதிகளிடம் இருந்து அத்தகைய உள் ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை எழுந்துள்ளது.
மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் செயற்குழு (CWC) உறுப்பினருமான அபிஷேக் சிங்வி, கார்கேவின் ராஜாஜி மார்க் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சட்ட அம்சங்கள் குறித்து விளக்கமளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அவரும் விவேக் தங்கா போன்ற வழக்கறிஞர் தலைவர்களும் இந்த பிரச்சினை அரசியல் மற்றும் கட்சிகளின் அரசியல் அழைப்பை எடுக்க வேண்டும் என்று கருதினர்.
ஏறக்குறைய ஒன்றரை மணி நேர விவாதத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள பல தலைவர்களுடனும், கட்சி மன்றத்திற்கு வெளியே உள்ள ஆதரவாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக கட்சி முதல்வர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களை கார்கே சந்திக்கிறார்.
மாயாவதியின் பகுஜன் சமஜ் கட்சி, சிராஜ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி மற்றும் ராம்தாஸ் அத்வாலேவின் இந்தியக் குடியரசுக் கட்சி உட்பட, குறிப்பிடத்தக்க தலித் வாக்குகள் இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் பல கட்சிகள் ஏற்கனவே இந்த தீர்ப்பின் பல்வேறு அம்சங்களைச் சாடியுள்ளன. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய தனது கட்சி உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் என்று சிராஜ் பாஸ்வான் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நடத்திய கூட்டத்தில் தலித் தலைவர்கள் முன்னிலையில், முகுல் வாஸ்னிக், குமாரி செல்ஜா, பி.எல். புனியா, உதித் ராஜ் மற்றும் காங்கிரஸின் எஸ்.சி துறைத் தலைவர் ராஜேஷ் லிலோதியா ஆகியோர் உள்ப ஒரு கூட்டத்தை நடத்தினார்.
சித்தராமையா மற்றும் ரேவந்த் ரெட்டியின் நிலைப்பாடுகள் குறித்து கேட்டதற்கு, மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: “முதலமைச்சர்களுக்கு ஒரு பார்வை இருக்க முடியும்... அதற்கு காரணம் மாலா மற்றும் மாதிகா சமூகங்கள். ஆனால், கட்சி கருத்துதான் இறுதி. தனி நபர்கள் கட்சியின் கருத்துக்கு கட்டுப்பட வேண்டும். மேலும், கட்சியின் பார்வை பல்வேறு அம்சங்களைப் பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது... நாங்கள் ஒரு தேசிய கட்சி, எனவே,எங்கள் பார்வை தேசிய பார்வையாக இருக்கும்.” என்று கூறினார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி-களுக்கான இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% உச்சவரம்பை நீக்க வேண்டும் என்ற கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இவை இரண்டும் முக்கிய வாக்குறுதிகளாக இருந்தன.
இப்பிரச்னை குறித்து விவாதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ செவ்வாய்க்கிழமை டெல்லியில் தனித்தனியாக கூடியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆதரிக்கும் அதே வேளையில், தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட எஸ்சொ மற்றும் எஸ்டி இடஒதுக்கீட்டிற்குள் கிரீமி லேயர் அறிமுகப்படுத்தப் படுவதற்கு கட்சி தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியது. இந்த அரசியலமைப்பை மீறிய இந்த தீர்ப்பின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், 7 நீதிபதிகளில் 4 பேர் தனித்தனியாக கிரீமி லேயரை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர் என்று சி.பி.எம் குறிப்பிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.