Advertisment

ராகுல் காந்திக்கு தண்டனை விதித்தவர் உள்பட 68 பேரின் பதவி உயர்வு நிறுத்தம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்த மாஜிஸ்திரேட் உள்பட 68 பேரின் பதவி உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
SC stays Gujarat government decision to promote 68 judicial officers as district judges

குஜராத்தில் 68 நிதித்துறை அதிகாரிகளின் மாவட்ட நீதிபதி பதவி உயர்வை நிறுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதித்துறை அதிகாரிகள் 68 பேரை மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு செய்வதற்கான குஜராத் அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 12) தடை விதித்தது.

Advertisment

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர். ஷா, சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்தனர். இந்த 68 பேரில், ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் ஹரிஷ் ஹஸ்முக் பாய் வர்மாவும் ஒருவர் ஆவார்.

இந்த வழக்கில், ஆட்சேர்ப்பு விதிகளின்படி, மாவட்ட நீதிபதிகள் பணியிடங்கள் தகுதி மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் 65 சதவீத இடங்களை ஒதுக்கி நிரப்ப வேண்டும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.

ஆனால் தற்போது பணி மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏப்ரல் 13, 2023 அன்று நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், அதை ஏப்ரல் 28 அன்று திருப்பி அனுப்பியது.

ஏப்ரல் 28 அன்று விசாரணையின் அடுத்த தேதியில், நீதிபதிகள் ஷா மற்றும் ஜே பி பர்திவாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டிருந்த போதிலும், ஏப்ரல் 18 ஆம் தேதி பதவி உயர்வு உத்தரவை பிறப்பித்த அரசுக்கு விதிவிலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi Supreme Court Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment