”எங்களை கருணைகொலை செய்துவிடுங்கள்”: குடியரசு தலைவருக்கு வயதான தம்பதி கடிதம்

மும்பையை சேர்ந்த வயதான தம்பதியர் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மரணத்தின் காரணமாக ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து வாழ முடியாது என்ற காரணத்தால், மும்பையை சேர்ந்த வயதான தம்பதியர் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மும்பையை சேர்ந்த நாராயண் லாவத் (87) போக்குவரத்து துறை அலுவலராக பணிபுரிந்து 1989-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி இரவாதி (வயது 78), பள்ளி முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர். இந்த தம்பதியர்தான் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதினர்.

இதுகுறித்து இத்தம்பதிகள் இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியில், “நாங்கள் சோர்வுற்று இருக்கிறோம். எங்களை படுத்த படுக்கையாக வாழ்க்கை மாற்றும்வரை எங்களால் காத்திருக்க முடியாது”, என கூறியுள்ளனர்.

தாம் நோய்வாய்ப்பட்டுவிடுவோமோ என்ற பயமும், தங்களை யாரும் பார்த்துக்கொள்ள இல்லை என்ற தனிமையும் இத்தம்பதியரை இந்த முடிவை நோக்கி செலுத்தியிருக்கிறது. இந்த முடிவு முதலில் நாராயணனுக்கே தோன்றியுள்ளது.

×Close
×Close