Scarred by second wave, 10 states send O2 ramp-up plan : கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் போது, திரவ மருத்துவ ஆக்ஸிஜனுக்கு நிலவிய பற்றாக்குறை பேரழிவை ஏற்படுத்தியது. தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய 10 மாநிலங்களாவது தங்கள் திரவ ஆக்சிஜன் உற்பத்தி திறனை விரிவுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளன.
நாட்டில் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 வழக்குகளில் இந்த 10 மாநிலங்களில் 50% க்கும் அதிகமாக வழக்குகள் பதிவாகியிருந்தன. ஜூன் 12 வரை பதிவான நாட்டின் மொத்த கொரோனா இறப்புகளில் 41% சதவீதத்தையும் உள்ளடக்கியதாகும். கொரோனா இரண்டாவது அலை குறைந்து, சுகாதார உள்கட்டமைப்பு மீதான அழுத்தம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த எழுச்சியை எதிர்பார்த்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த திட்டங்கள் உள்ளன.
மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் மே 9 அன்று ஒரு நாளைக்கு 8,944 மெட்ரிக் டன் என்ற உச்சத்தை எட்டியதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் காட்டுகின்றன. இது ஜூன் 12 அன்று ஒரு நாளைக்கு 2500 மெட்ரிக் டன் என்ற அளவு வரை குறைந்துள்ளது. இதனிடையே, மே7-ம் தேதி இரண்டாவது அலையின் உச்சமாக இருந்தபோது நாடு முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.14 லட்சத்தைத் எட்டியிருந்தது.
இரண்டாவது அலையின் போது, திரவ ஆக்சிஜன் போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிரமத்தின் அடிப்படையில் இந்த 10 மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களின் ஆக்சிஜன் உற்பத்தி திறன் தொடர்பான செயல் திட்டங்கள் இந்த வாரம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை அடுத்த சில நாட்களில் மத்திய அரசால் ஆராயப்பட உள்ளது. இந்த செயல் திட்டங்களை மறுஆய்வு செய்ய அமைச்சரவை செயலாளர் ஒரு கூட்டத்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை, பி.எம். கேர்ஸ் நிதியின் மூலம் 135 மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அலையின் போது, மத்திய அரசின் ஆக்சிஜன் ஒரு நாளைக்கு சுமார் 9,000 மெட்ரிக் டன் எனஅ உயர்ந்தது. இது கடந்த ஆண்டு முதல் கோவிட் அலையின் போது மூன்று மடங்கு அதிகபட்ச தேவை மற்றும் சாதாரண தேவையிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்தது.
மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த ஆக்ஸிஜனின் தரவுகளில் உற்பத்தியாளர்கள் மற்றும் மறு நிரப்பல்களால் மருத்துவமனைகளுக்கு மொத்தமாக திரவ ஆக்ஸிஜன் வழங்கப்படுவதோடு, சிலிண்டர்களில் ஆக்ஸிஜனை மருத்துவமனைகளுக்கு மறு நிரப்பிகளால் வழங்குவதும் அடக்கமாகும். கொரோனா முதல் அலையின் போது, திரவ ஆக்சிஜனின் அதிகபட்ச விநியோகம் ஒரு நாளைக்கு 3,095 மெட்ரிக் டன் ஆகும். இது, செப்டம்பர் 29, 2020 அன்று பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், இது கீழ்நோக்கிய போக்கைப் பின்பற்றியது. உண்மையில், எல்.எம்.ஓ விற்பனை இந்த ஆண்டு மார்ச் 31 அன்று 1,559 மெட்ரிக் டன் மட்டுமே ஆகும்.
இருப்பினும், இரண்டாவது அலை முன்னோடியில்லாத வகையில் தேவைக்கு வழிவகுத்தது. ஏப்ரல் 30 அன்று ஒரு நாளைக்கு 8,000 மெட்ரிக் டன் என்ற அளவை கடந்தது. மே 8 நிலவரப்படி, நாட்டில் கிட்டத்தட்ட 50,000 கோவிட் நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர். 14,500 க்கும் அதிகமானோர் வென்டிலேட்டர் ஆதரவிலும், 1.37 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்ஸிஜன் ஆதரவிலும் இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil