/tamil-ie/media/media_files/uploads/2018/01/delhi-2.jpg)
பள்ளி சத்துணவில், கூடுதலாக குழம்பு கேட்ட 1 ஆம் வகுப்பு மாணவனின் மீது, சமையல்காரர் சூடான குழம்பை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின், திந்தூரி கிராமத்தில் ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவ- மாணவியர் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளியில் அரசாங்கம் சார்பில், மதிய உணவு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், பள்ளியில் 1 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவன் ப்ரின்ஸ் மேரா, சம்பவதன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று, மதிய இடைவெளியில் சத்துணவில் உணவு வாங்க சென்றுள்ளான்.
அன்றைய தினம், சாதத்திற்கு வழங்கப்பட்ட குழம்பு, அதிக சுவையுடன் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவன், உணவு வழங்கும் சமையல்காரரிடம் இரண்டாவது தடைவாக குழம்பு கேட்டுள்ளான். இதனால், கோபமடைந்த அந்த சமையல்காரர், அச்சிறுவனின் மீது சூடான குழம்பை எடுத்து ஊற்றியுள்ளார். இதனால், சிறுவனின் முகம் மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த, 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்த செய்திகள் தற்போது இணையதளங்களில் பரவி வருகின்றன.
இதுக்குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள திந்தூரி பகுதி காவல் துறையினர், சம்மந்தப்பட்ட சமையல்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.