scorecardresearch

கொரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் : இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வு

கொரோனா வைரஸின் மரபணு மாற்றங்களைக் கண்டறிய இந்திய விஞ்ஞானிகள் சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆராய்ச்சியாளர்களுடன் இணைய உள்ளனர்.

கொரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் : இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வு

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரிக்ஸ் குழுவின் இந்திய விஞ்ஞானிகள் SARS-CoV-2 இன் மரபணு வரிசைமுறை, தொற்றுநோயியல் மற்றும் தொற்றுநோயின் கணித மாதிரியை ஆய்வு செய்ய உள்ளனர். மரபணு மாற்றங்கள், மறுசீரமைப்பு மற்றும் வைரஸின் பரவல் ஆகியவற்றைக் கண்டறிய இந்திய விஞ்ஞானிகள் சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆராய்ச்சியாளர்களுடன் இணைகிறார்கள். வரும் காலங்களில் உலகில் கொரோனா பரவல் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.

மரபணு மாற்றங்கள் மற்றும் வைரஸின் மறுசீரமைப்புகளை அடையாளம் காண ஒரு முழு மரபணு வரிசைமுறை தேவைப்படுகிறது, அதே நேரத்தில் தொற்றுநோயியல் ஆய்வுகள் அதன் பரவலை மதிப்பிட உதவும். அதன் எதிர்கால பரவலை மதிப்பிடுவதற்கு கணித மாடலிங் தேவைப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களை கொண்டு நடத்தப்படுகிறது. ஐதராபாத் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் சசிகலா, சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சைனீஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் -ன் நுண்ணுயிரியல் பேராசிரியர் யூஹுவா ஜின், ரஷ்யாவின் திமகோவாவை சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளர் இவான் சோகோலேவ், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஓஸ்வால்டோ குரூஸ் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த டாக்டர் மரில்டா மெண்டோனியா சிக்வேரா ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

இந்திய மற்றும் பிரேசிலிய தரப்புகள் கழிவு நீர் அடிப்படையிலான தொற்றுநோயியல் (WBE) கண்காணிப்புக்கான மெட்டஜெனோம் பகுப்பாய்வு மூலம் சுற்றுச்சூழல் மாதிரிகளில் SARS-CoV-2 பரவலை மதிப்பீடு செய்யும். இதற்கிடையில், சீன மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள், சுவாச நோய்களின் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளிடமிருந்து உயிரியல் பொருட்களில் SARS-CoV-2 இன் ரியல் டைம் PCR கண்டறிதலை மேற்கொள்வார்கள் மற்றும் மரபணு மாறுபாடு, ஒப்பீட்டு மரபியல் மற்றும் பைலோஜெனடிக் பகுப்பாய்வு ஆகியவற்றை ஆய்வு செய்வார்கள்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசிலில் இருந்து மரபணு, மெட்டஜெனோமிக் மற்றும் தொற்றுநோயியல் தரவு ஆகியவை கணித மாதிரிகளை உருவாக்க ஒருங்கிணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த மாதிரிகள் மியூடேஷன் பகுப்பாய்வு, மக்கள்தொகை மரபியல், பைலோஜெனடிக் உறவுகள், மறுசீரமைப்பு பகுப்பாய்வு மற்றும் வைரஸின் பரவலின் ஆபத்து ஆகியவை குறித்து விவரிக்கும்.

வெவ்வேறு குழுக்களால் உருவாக்கப்பட்ட தரவுத்தளம் பல்வேறு பிராந்தியங்களில் வைரஸின் பரவல் மற்றும் உயிர்வாழ்வை ஒப்பிட்டு, சம்பந்தப்பட்ட ஆரம்ப எச்சரிக்கை அமைப்பின் கண்காணிப்பை எடுத்து கூறும்.

நான்கு நாடுகளை சேர்ந்த சர்வதேச ஒத்துழைப்பாளர்களின் பலத்தை கருத்தில் கொண்டு கூட்டு ஆராய்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நான்கு வெவ்வேறு நாடுகளின் தரவைப் பகிரவும் பகுப்பாய்வு செய்யவும் மற்றும் வைரஸின் பரவல் வழிகள் மற்றும் பரிமாற்ற இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள ஒரு பொதுவான தளத்தை வழங்கும் என்று டிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Scientists from india 3 other nations to conduct covid genome sequencing

Best of Express