SARS-CoV2 இன் தோற்றம் குறித்த விரிவான விசாரணைக்கு, இந்தியாவில் இருந்து மூன்று விஞ்ஞானிகள் உட்பட உலகெங்கிலும் உள்ள 30 விஞ்ஞானிகள் திறந்த கடிதத்தின் மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
கடிதம் எழுதியுள்ள விஞ்ஞானிகளில் அமெரிக்காவின் அட்லாண்டிக் கவுன்சிலின் மூத்த விஞ்ஞானி ஜேமி மெட்ஸ்ல், பாரிஸை தளமாகக் கொண்ட பரிணாம மரபியலாளர் வர்ஜீனி கோர்டியர் மற்றும் அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ரிச்சர்ட் எப்ரைட் ஆகியோர் அடங்குவர்.
புனேயைச் சேர்ந்த, BAIF அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் மூத்த விஞ்ஞானி ராகுல் பாஹுலிகர், அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் உயிர் ஆற்றல் குழுவின் விஞ்ஞானி மோனாலி ரஹல்கர் மற்றும் மேற்கு வங்கத்தின் பிங்லா தான மகாவித்யாலயாவின் கணித உதவி பேராசிரியர் ஸ்க் சரிஃப் ஹசன் ஆகிய இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் கடிதம் எழுதியவர்களில் அடங்குவர். இவர்கள் நம்பத்தகுந்த தோற்றக் கருதுகோள்களில் விஞ்ஞான மற்றும் தடயவியல் விசாரணையை கோருகின்றனர்.
புனே விஞ்ஞான தம்பதியர் டாக்டர் மோனாலி ரஹல்கர் மற்றும் அவரது கணவர் டாக்டர் ராகுல் பாஹுலிகர் ஆகியோர் வைரஸின் ஆய்வக தோற்றம் குறித்த சாத்தியமான கோட்பாட்டின் சில புள்ளிகளில் சேர தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் முறையான ஆராய்ச்சி விசாரணையை மேற்கொண்டனர். இது நான்காவது திறந்த கடிதம் என்று டாக்டர் ரஹல்கர் கூறினார்.
ஜூன் 28 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில் கையொப்பமிட்ட, விஞ்ஞானிகள் கூறியதாவது: “தொற்றுநோய் தோற்றம் குறித்து அடையாளம் காணப்படுவதிலும், நமது மிகப் பெரிய பாதிப்புகளுக்கு தீர்வு காணப்படுவதிலும் சீனா உட்பட ஒவ்வொரு தேசமும் நேரடி அக்கறை கொண்டுள்ளனர். ஆனால், எல்லா வகையிலும் நம்பத்தகுந்த தோற்றம் பற்றிய விரிவான விசாரணைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதும், குறிப்பாக, தற்போது விசாரணை எதுவும் திட்டமிடப்படவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது. ”
ஜூன் 12 அன்று, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனாவால் இறந்த பல மில்லியன் மக்களின் குடும்பங்கள் “இந்த வைரஸின் தோற்றம் என்ன என்பதை அறியத் தகுதியானது, இதனால் இது மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்” என்றார்.
இந்த கருத்துகளுக்கு இணங்க, ஜி 7 தலைவர்கள் மறுநாள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர், அதில் “சீனாவில் சரியான நேரத்தில், வெளிப்படையான, நிபுணர் தலைமையிலான, மற்றும் நிபுணர்களின் அறிக்கையால் பரிந்துரைக்கப்பட்ட அறிவியல் அடிப்படையிலான WHO- ஆல் கூட்டப்பட்ட 2ஆம் கட்ட கோவிட் -19 தோற்ற ஆய்வு நடத்தப்பட வேண்டும்". என்று தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்று திறந்த கடிதங்களில் தொற்றுநோய் தோற்றம் குறித்து விரிவான விசாரணைக்கு அழைப்பு விடுத்த விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் தொடர்பாளர்கள், இந்த அறிக்கைகளை வரவேற்று, தொடர்புடைய அனைத்து பதிவுகளுக்கும் கட்டுப்பாடற்ற அணுகலுடன் அனைத்து நம்பத்தகுந்த மூலக் கருதுகோள்களிலும் தேவையான மாதிரிகள் மற்றும் பணியாளர்களுடன் சீனாவில் விரிவான அறிவியல் மற்றும் தடயவியல் விசாரணைக்கு அழைப்பு விடுத்தனர்.
தொற்றுநோய்களின் தோற்றத்தை விரிவாக ஆராயத் தவறியது உலக மக்களையும் எதிர்கால சந்ததியினரையும் தேவையற்ற ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், தொற்றுநோய்களின் முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக இரண்டு தடங்கள் கொண்ட அணுகுமுறையை பின்பற்றுமாறு உலகத் தலைவர்களை அவர்கள் கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil