Advertisment

மும்பை கூட்டத்தில் தொகுதி பங்கீடு, குழு கட்டமைப்பு: காத்திருக்கும் ஐ.என்.டி.ஐ.ஏ. தலைவர்கள்!

பெங்களூருவில் 26 கட்சிகள் சந்தித்த நிலையில் மும்பையில் 28 கட்சிகள் ஒன்றிணைகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Seat-sharing may wait INDIA to put in place groups structure at Mumbai meeting

லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி கட்சியினர் மும்பையில் இன்றும் (ஆக.31) நாளையும் (செப்.1) சந்திக்கிறார்கள். இதில் 28 கட்சிகளின் தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.

இதில் பாரதிய ஜனதா எதிர்ப்பு முன்னிலைப்படுத்தப்படும். மேலும் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணிக்கு ஒரு லோகோ மற்றும் ஒருங்கிணைப்பாளர் நியமனம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

Advertisment

இதில் ஒருங்கிணைப்பாளர் பதவி சர்ச்சைக்குரிய வகையில் மாறியுள்ளது. ஏனெனில் கூட்டணியில் பல்வேறு முக்கிய மாநிலத் தலைவர்கள் காணப்படுகிறார்கள்.

எனவே இதில் ஒருவரை தலைவராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இடப்பகிர்வு குறித்து பேசப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஒருங்கிணைப்பு குழுவும், பரப்புரை நிர்வாக விவரங்களும் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த தலைவர் ஒருவர், “நாம் ஒரு கட்டமைப்பையும் கட்டிடக்கலையையும் வைக்க வேண்டிய நேரம் இது. கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய இடத்தில் கூடி இருக்க முடியாது” என்றார்.

இதற்கிடையில் எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே இரவு விருது வழங்குகிறார். இது காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை தீர்க்க வாய்ப்பாக அமையும் என்று நம்பப்படுகிறது.

மறுபுறம், எதிர்க்கட்சி தலைவர் சரத் பவாரிடமிருந்து வரும் கலவையான செய்திகள் பல தலைவர்களையும் கலக்கமடையச் செய்கின்றன.

கூட்டத்தின் முன் மிகவும் கடினமான பிரச்சினையான இடப் பங்கீட்டைப் பொறுத்தவரை, தலைவர்கள் அதை மீண்டும் தவிர்க்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் புதன்கிழமை (ஆக.30) செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், “நாங்கள் இன்னும் சீட் பங்கீடு பற்றி விவாதிக்கத் தொடங்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கைகள் (இருக்கைப் பகிர்வு குறித்து) விவாதிக்கப்படும். அது நடந்தால், அதற்கான பொறுப்பு சிலருக்கு வழங்கப்படும்” என்றார்.

அப்போது, உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக். சவான் மற்றும் என்சிபி மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் உடனிருந்தனர்.

தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் 28 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 63 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று பவார் அறிவித்தார். பெங்களூரு கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டன.

அந்த வகையில் மும்பை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி இதில் இணையும் எனத் தெரியவருகிறது.

மறுபுறம் ஒருங்கிணைப்பாளர் குறித்த கேள்விக்கு உத்தவ் தாக்கரே, “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ.) ஒருங்கிணைப்பாளர் யார் என்று யாருக்காவது தெரியுமா?” எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும், பிரதமர் தொடர்பான கேள்விக்கு, “நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதில் எங்களுக்கு பல தேர்வுகள் உள்ளன” என்றார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் முன்மொழிந்ததையடுத்து, இந்த விவகாரம் புதன்கிழமை சில படபடப்பை உருவாக்கியது.

தொடர்ந்து, அகாலிதளம் அல்லது ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகள் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி உடன் இணைய முடியுமா என்ற கேள்விக்கு, அவர்களில் சிலருடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அவர்களை சேர்க்கும் முடிவுக்கு முன்னணியில் உள்ள மற்றவர்களின் ஒப்புதல் தேவை என்றும் பவார் கூறினார்.

மாயாவதி தொடர்பான கேள்விக்கு சரத் பவார், “அவர் பாஜக உடன் உறவாடி வருகிறார் எனக் கூறப்படுகிறது. அவர்தான் தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்றார்.

மேலும், கட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து, என்சிபி தலைவர் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்குவது குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில் எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி என்பதற்கு பதிலாக பாரத் மாதா காவலர்கள் என அழைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைப்பு பற்றி பேசிய அவர், “கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் தங்களின் சகோதரிகளை மறந்துவிட்டார். தேர்தலுக்கு முன்புதான் அவருக்கு நியாபகம வந்துள்ளது” என்றார்.

முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் கூறுகையில், ரக்ஷா பந்தன் அன்று ஒரு சகோதரன் தன் சகோதரியை பார்த்துக் கொள்வதாக சபதம் செய்வது போல, பாரத மாதாவை பாதுகாப்பதாக ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி சபதம் செய்கிறது” என்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mumbai Congress Sharad Pawar Aam Aadmi Party Uddhav Thackeray
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment