Advertisment

கோவிட் 2வது அலை பாதித்த சாலையோர வியாபாரிகள்; கடனை திருப்பி செலுத்தாதவர்கள் 5ல் 1 பங்குக்கும் குறைவு

கோவிட் 2-வது அலை சாலையோர வியாபாரிகளை கடுமையாக பாதித்தது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணக் கடனை 5ல் 1 பங்குக்கும் குறைவானவர்கள் மட்டுமே திருப்பிச் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Covid impact, covid impact on street vendors, AtmaNirbhar Nidhi, coronavirus cases, street vendors loan scheme, street vendors loans, second Covid wave, covid impact on street vendors, street vendor, what is PM SVANidhi scheme, SVANidhi scheme explained, Pradhan Mantri Street Vendors’ Atmanirbhar Nidhi Yojana, india news, india latest news

கோவிட் 2வது அலை பாதித்த சாலையோர வியாபாரிகள்;

கோவிட் 2-வது அலை சாலையோர வியாபாரிகளை கடுமையாக பாதித்தது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணக் கடனை 5ல் 1 பங்குக்கும் குறைவானவர்கள் மட்டுமே திருப்பிச் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஜூலை 2020 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில், மொத்த கடன்களின் எண்ணிக்கையில் வெறும் 17.51 ​​சதவீதம் மட்டுமே மோசமானதாகவோ அல்லது செயல்படாததா கடன்களாகவோ மாறியுள்ளது.

Advertisment

2021-22 ஆம் ஆண்டில், கோவிட்-19 கொடிய 2-வது அலையுடன் தொடங்கிய அந்த ஆண்டில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 5,000-10,000 வரை கடன் வாங்கிய சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடன் வாங்கியவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாக, ஜூலை 2020 மற்றும் பிப்ரவரி 2023-க்கு இடையில், மொத்த கடன்களின் எண்ணிக்கையில் வெறும் 17.51 ​​சதவீதம் மட்டுமே மோசமானதாகவோ அல்லது செயல்படாததாகவோ மாறியுள்ளது.

பிரதம மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதியின் (PM-SVANidhi) கீழ், 2020-ல் வழங்கப்பட்ட மொத்த கடன்களின் எண்ணிக்கையில், 2020-21 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடன்களின் எண்ணிக்கையில் 3.98 சதவீதத்திலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடன்களின் எண்ணிக்கையில் 48.18 சதவீதம் அளவு கடன்கள் செயல்படாத அல்லது மோசமானதாக மாறியது என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் தகவல்கள், மூன்று ஆண்டுகளில் (ஜூலை 2020 முதல் பிப்ரவரி 10, 2023 வரை), 33.69 லட்சம் கடன்கள், ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அளிக்கபட்ட கடன்கள் ஒவ்வொன்றும் ஒரு வருட முதிர்வு காலத்துடன் சேர்த்து ரூ.3,345 கோடி வரை கொடுக்கப்பட்டது. இவற்றில், இந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி நிலவரப்படி, 15.05 லட்சம் கடன்கள் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன (ஆண்டு வாரியான தரவுகளுக்கான விளக்கப்படத்தைப் பார்க்கவும்).

பிரதமர் ஸ்வாநிதியின் கீழ் சாலையோர வியாபாரிகளின் கடனுக்கு ரூ.58 கோடி வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்கியது.

அதிகாரிகளின் கருத்துப்படி, சாலையோர வியாபாரிகள் செலுத்த வேண்டிய கடன் மாதத் தவணைகள் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ. 934 இல் தொடங்குகிறது. இது அசல் தொகை மற்றும் 7 சதவீத அரசு மானியத்திற்குப் பிறகு வங்கிகள் வசூலிக்கும் வட்டியைப் பொறுத்து இருக்கும். பிப்ரவரி 10, 2023 வரையிலான மூன்று ஆண்டுகளில் வட்டி மானியமாக ரூ.57.05 கோடியை அரசாங்கம் செலுத்தியுள்ளது.

தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கமான பருவமழை, இன்னும் ஒரு வருடம் நல்ல மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இல்லை. எல் நினோ விளைவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதே அதற்கு முக்கிய காரணம். ஆனால், மிதமான எல் நினோ என்பது குறைந்த மழைப்பொழிவைக் குறிக்காது. மேலும், எல் நினோவின் தாக்கம் உடனடியாக இல்லை. ஜூலையில் எதிர்பார்க்கப்படும் எல் நினோவின் வளர்ச்சி, பருவமழையின் முடிவில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் செயல்படாத சொத்துகளாக (NPAs) மாறிய கடன்களின் மொத்த மதிப்பு குறித்த தரவை அமைச்சகம் வழங்கவில்லை. ஆர்.டி.ஐ.யின் கீழ், ஒரு வருடத்தில் செயல்படாத அல்லது மோசமான கடன் கணக்குகளின் சதவீதத்தின் தரவுகளை மட்டுமே வழங்குகிறது.

ஜூலை 2020 இல் தொடங்கப்பட்ட பிரதமர் ஸ்வாநிதியின் (PM-SVANidhi) கீழ், முதல் காலக் கடனாக ரூ. 5,000-10,000 ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்துவதன் மூலம், ரூ. 20,000 வரையிலான இரண்டாம் காலக் கடனை இரண்டு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவதற்குத் தகுதியான விற்பனையாளரை உருவாக்கினார். இதுவும் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்பட்டால், வியாபாரிகள் ரூ. 50,000 வரையிலான மூன்றாம் கால கடனுக்குத் தகுதி பெறுவார்.

பிரதமர் ஸ்வாநிதியின் (PM-SVANidhi) கடனில் பெரும்பகுதி - மொத்தம் ரூ. 4,898.75 கோடியில் ரூ. 3,345 கோடி - ஜூலை 2020 தொடங்கி பிப்ரவரி 10, 2023 வரையிலான மூன்று ஆண்டுகளில் 33.69 லட்சம் கணக்குகளுக்கு முதல் காலக் கடனாக நீட்டிக்கப்பட்டது. இரண்டாவது காலக் கடனின் கீழ் மொத்தம் ரூ.1,461 கோடி கடனாக 7.32 லட்சம் கடன் கணக்குகளுக்கும் மற்றும் மூன்றாம் கால கடனின் கீழ் ரூ.94 கோடியும் வழங்கப்பட்டன.

பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், பங்குபெறும் வங்கிகளால் அறிவிக்கப்பட்ட என்.பி.ஏ.க்களின் விகிதம் மற்றும் 2021-2022-ல் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகியவை இரண்டாவது அலையின் தாக்கத்தை சுட்டிக்காட்டுகின்றன. என்.பி.ஏ விகிதங்கள் திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்களின் எண்ணிக்கையையும், அதுவரை வழங்கப்பட்ட காலக் கடன்களின் மொத்த எண்ணிக்கையிலிருந்து சரியான நேரத்தில் செலுத்தப்பட்டதையும் கழிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.

இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து பிப்ரவரி 10-ம் தேதி வரை மொத்தம் 193 வங்கிகள் மொத்தம் 41.20 லட்சம் கடன்களை (ஒவ்வொன்றும் ரூ. 10,000, தலா ரூ. 20,000 மற்றும் தலா ரூ. 50,000) வழங்கியுள்ளதாக ஆர்.டி.ஐ பதில் காட்டுகிறது. பொதுத் துறை வங்கிகள் அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மட்டும் 12.15 லட்சம் கடன்களை வழங்கியுள்ளது.

முதல் காலக் கடனைத் திருப்பிச் செலுத்தியவுடன், வியாபாரிகள் ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரையிலான இரண்டாம் காலக் கடனைப் பெற்று, இரண்டு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம். 2021 மே முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை இரண்டாம் காலக்கடன் தொடங்கப்பட்டதில் இருந்து மொத்தம் 7.32 லட்சம் கடன்கள் ரூ.1,461 கோடி வழங்கப்பட்டுள்ளன. இதில் 4,906 கடன் கணக்குகள் மட்டுமே மோசமானவை. 27,621 இரண்டாம் கால கடன்கள் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன. ஜூலை 2022 முதல், இரண்டாம் தவணை கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை மூன்றாம் காலக் கடன் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி வரை ரூ.94 கோடி மதிப்பிலான 18,890 மூன்றாம் கால கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆர்.டி.ஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment