Advertisment

நடிகர் சல்மான் கானை கொல்ல சதி; 4 பேர் கைது

நடிகர் சல்மான் கானை 2 ஆவது முறையாக கொல்ல சதி; பண்ணை வீட்டை நோட்டமிட்டதாக 4 பேர் கைது

author-image
WebDesk
New Update
salman khan

நடிகர் சல்மான் கான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே இரண்டு குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு, நவி மும்பை போலீசார் சனிக்கிழமையன்று, நடிகர் சல்மான் கான் பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றபோது, அவர் மீது மற்றொரு கொலை முயற்சி திட்டமிடப்பட்டதாகவும், இந்த வழக்கில் கடந்த வாரம் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

மும்பை மற்றும் நவி மும்பை ஆகிய இரு வழக்குகளிலும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பிளாக்பக் மானை சுட்டுக் கொன்றதால் சல்மான் கான், இந்தக் கும்பலின் ரேடாரில் சிக்கியுள்ளார், மேலும் அவருக்கு மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது. இது மும்பையில் காலூன்றுவதற்கும், நகரத்தில் மிரட்டி பணம் பறிக்கத் தொடங்குவதற்கும் லாரன்ஸ் பிஷ்னோய் மேற்கொண்ட முயற்சி என்று போலீசார் கருதுகின்றனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, நவி மும்பை நடவடிக்கையில் கிட்டத்தட்ட 16-17 பேர் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்கள் இந்த ஆண்டு பிப்ரவரியில் பன்வெல் பண்ணை வீட்டை நோட்டமிட்டுள்ளனர்.

“இந்த வழக்கில் நான்கு பேரை கைது செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர் நீண்ட காலமாக நடிகர் சல்மான் கானை குறிவைத்து சதி செய்து கொண்டிருந்தார், மேலும் பன்வெல்லில் தங்கியிருந்து நோட்டமிட்டுள்ளார்,” என்று துணை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சாரே கூறினார்.

மும்பை தாக்குதல் குறித்து விவேக் பன்சாரேவிடம் கேட்டபோது, “லாரன்ஸ் பிஷ்னோயிடம் பல குழுக்கள் ஒன்றுக்கொன்று சாராமல் செயல்படுகின்றன, ஒரு கும்பல் பன்வெல்லிலும் மற்றொன்று மும்பையிலும் இருந்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்றார்.

நவி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் அஜய் காஷ்யப் என்கிற தனஞ்சய் தபேசிங், நஹ்வி என்கிற கௌரவ் பாட்டியா, வாப்சி கான் என்கிற வசீம் சிக்னா மற்றும் ரிஸ்வான் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எஃப்.ஐ.ஆரின் படி, பன்வெல் மூத்த இன்ஸ்பெக்டர் நிதின் தாக்ரே, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் பன்வெல்லில் முகாமிட்டிருப்பது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஏகே-47 ரகங்களை வாங்குவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த டோகர் என்ற நபருடனும் காஷ்யப் தொடர்பு கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகி கன்னியாகுமரியில் மீண்டும் ஒன்றுகூடி அங்கிருந்து இலங்கைக்கு செல்லவிருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்களுக்கும் பாந்த்ரா தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் சோதித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாந்த்ரா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரை மும்பை குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Salman Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment