Advertisment

கொரோனா இரண்டாம் அலை நிறுவன மறுசீரமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது - நிர்மலா சீதாராமன்

இந்த சூழலில் மக்களின் உயிரை காக்க தேவையான உடனடி நடவடிக்கைகள் குறித்து நம்முடைய எண்ணம் இருக்க வேண்டும்

author-image
WebDesk
New Update
Second wave will not affect big reform push, says Nirmala Sitharaman

Second wave will not affect big reform push : கொரோனா இரண்டாம் அலை நிச்சயமாக திட்டமிடப்பட்ட நிறுவன மறுசீரமைப்பு இலக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டிசின்வெஸ்ட்மெண்ட் போன்ற நிதி அறிக்கையின் போது குறிப்பிட்ட முக்கிய திட்டங்களிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர் கூறினார். தற்போது மக்களின் உயிரை காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்றார். இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் பைனான்ஸ் டைம்ஸ் இணைந்து நடத்தும் ஆன்லைன் விவாதத்தில் பங்கேற்ற நிதித்துறை அமைச்சர் இவ்வாறு கூறினார்.

Advertisment

நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது இருந்த நிலையும் தற்போதைய நிலையும் முற்றிலும் வேறானது என்று மேற்கோள் காட்டிய அவர் தற்போது மைக்ரோ கண்டெய்ன்மெண்ட் ஸோன்கள் போதும் என்று கூறினார்.

மேலும் படிக்க : அற்புதம் நிகழும் என்ற எண்ணம் கொரோனாவை வெல்ல உதவாது

இவ்வாறு கூறப்பட்ட போதிலும் சில இடங்களில் கொரானா தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. டெல்லியில் ஒரு வாரம் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் அடிப்படை தேவையை பூர்த்திசெய்வது கடினமாக இருந்தது. மேலும் தொழில்துறை இதனால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தொழில்துறை குறித்த முன்னதாகவே நான் யோசிப்பதாக இருந்தாலும் கூட தொழில்துறையால் ஏற்பட இருக்கும் பாதிப்பு ஒரு வாரத்திற்கும் மேலாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். பொறுத்திருந்து பார்த்து பின்புதான் முடிவை எடுக்க வேண்டும். நடமாட்டம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. தொழில்த்துறை நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. எனவே நாம் சிறப்பாக ஒற்றுமையுடன் செயல்பட்டால் அது நம்மை மீண்டும் பாதிக்கும் என்று எண்ணாமல் இருக்க வேண்டும்.

இந்தியா தேவையான மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்து வருகிறது மற்றும் இரண்டாம் அலையின் சவால்களை சமாளிக்க இந்தியா தடுப்பூசிகள் மற்றும் சோதனை செய்யும் திறன்களை கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றி குறித்து மாநில அரசுகள் தொடர்ந்து தங்களின் கருத்துக்களை முன்வைக்கின்றனர். எவ்வாறாயினும் இந்த தருணத்தில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து உதவிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த சூழலில் மக்களின் உயிரை காக்க தேவையான உடனடி நடவடிக்கைகள் குறித்து நம்முடைய எண்ணம் இருக்க வேண்டும் என்றும் தடுப்பு ஊசி வழங்குதலை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். India’s Quest for Economic Power’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உரையாடலில் இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

‘தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் இந்தியாவின் இடம்’ என்ற பரந்த கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தொடரின் முதல் பகுதி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தகொள்கை மற்றும் வணிக மற்றும் நிதித் தலைவர்கள் பொருளாதார சக்திக்கான தேடலில் இந்தியாவுக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.

“… நமது பொருளாதாரம் இன்றும் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பகுதி ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளன, ஆனால் (தொற்று) சங்கிலி உடைந்தவுடன் அவை நீக்கப்பட்டிருக்கும். ஊரடங்கு உண்மையில் திணிக்கப்படாத சூழலில், தொற்றுநோயால் உயிர்கள் சிரமத்தில் இருப்பதால், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கல் போன்ற நடவடிக்கைகளில் நான் கவனம் செலுத்துவேன், பின்னர் பொருளாதாரம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை குறித்து உரையாற்ற வேண்டும், ”என்றார் சீதாராமன்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் பி. வைத்யநாதன் ஐயருடன் உரையாடலில் பங்கேற்றார். இதில் பைனான்சியல் டைம்ஸ், ஆசியா நியூஸ் ஆசிரியர் ஜோசப் லீ பங்கேற்றார். மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இரண்டாம் அலையில் சவாலானதாக இருக்கிறது. மெடிக்கல் ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் மருந்து விநோயகம் தொடர்பாக அரசு தொடர்ந்து முடிவுகள் எடுத்து வருகிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

நடப்பு ஆண்டிற்கான ரூ .1.75 லட்சம் கோடி டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது; பிபிசிஎல், ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆகியவை முக்கிய மூலோபாய விற்பனை திட்டங்களில் உள்ளன. அமைச்சகம் சமீபத்தில் அறிவித்த கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, சீதாராமன் உள்நாட்டு திறனை வலுப்படுத்துவதற்காக இவை செய்யப்பட்டுள்ளன, ஆனால் கட்டண நடவடிக்கைகள் பிற்போக்குத்தனமாக இருக்கக்கூடாது என்பதை அரசாங்கம் அறிந்திருந்தது. நிறுவனங்கள் மீதான பெருகிவரும் அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு மற்றொரு கடன் தடை அல்லது வங்கித் துறைக்கு பிற நடவடிக்கைகள் தேவைப்படுமா என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் பொருளாதாரத்தை அன்றாட அடிப்படையில் மிக விரிவான முறையில் கண்காணித்து வருகிறேன் என்றாலும், இந்த நேரத்தில் இன்னும் ஒரு திட்டம் இல்லை. " என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment