இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) பூரியின் புகழ்பெற்ற 12 ஆம் நூற்றாண்டின் ஜெகநாதர் கோயிலின் உட்புற கருவூல அறையை ரத்ன பண்டரை லேசர் ஸ்கேன் செய்ய வாய்ப்புள்ளது. அங்கு ஒரு ரகசிய சுரங்கப்பாதை மற்றும் விலைமதிப்பற்ற நகைகளைக் கொண்ட அறை இருப்பதாக கூறப்படும் நிலையில் தொல்பொருள் ஆய்வு மையம் லேசர் ஸ்கேன் செய்ய உள்ளது.
பூரியின் முன்னாள் அரச குடும்பம் திப்யசிங்க டெப், ஆலய நிர்வாகக் குழு தலைவர் கூறுகையில், "உள் ரத்ன பண்டரில் ஏதேனும் ரகசிய சுரங்கப்பாதை உள்ளதா என்பதை அறிய லேசர் ஸ்கேனிங் செய்ய ASI மிகவும் அதிநவீன கருவியைப் பயன்படுத்தும்" என்று கூறினார்.
கோயில் நிர்வாகம் ரத்னா பண்டரின் வெளி மற்றும் உள் அறை இரண்டையும் முழுமையான சோதனைக்குப் பிறகு ஏ.எஸ்.ஐயிடம் ஒப்படைக்கும்.
வியாழனன்று கருவூலத்தின் உள் அறை திறக்கப்பட்டு விலைமதிப்பற்ற பொருட்கள் தற்காலிக மற்றொரு பாதுகாப்பான அறைக்கு மாற்றப்பட்டது. அறையை ஆய்வு செய்ய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவாக இது செய்யப்பட்டது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு கருவூல உள்அறை கடந்த சில நாட்கள் முன் திறக்கப்பட்டது. உள் அறைக்குள் எந்த ரகசிய சுரங்கப் பாதைக்கான ஆவண ஆதாரங்கள் இல்லை என்றாலும், சேவையாளர்களில் ஒரு பிரிவினர் அது இருப்பதாகக் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Secret tunnel inside Jagannath Temple? ASI to laser scan Ratna Bhandar
வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மேற்பார்வைக் குழுவின் தலைவர் நீதிபதி பிஸ்வநாத் ராத், அத்தகைய சுரங்கப்பாதைக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நகைகளை வேறு இடத்தில் மாற்ற 7.5 மணி நேரம் ஆனது என்றார்.
மேலும் கூறிய அவர், "இதுபோன்ற கோட்பாடுகளை நாங்கள் ஒருபோதும் நம்பவில்லை, ஏனெனில் இது எந்த ஆவண ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. நாங்கள் அனைத்து ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை மாற்றியுள்ளோம், மேலும் உள் அறையின் சுவர்களை ஆய்வு செய்துள்ளோம், மேலும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை இருப்பதற்கான நிகழ்தகவை நாங்கள் காணவில்லை," என்று ராத் செய்தியாளர்களிடம் கூறினார், இருப்பினும் ஆய்வு செய்யப்படும் என்றார்.
அறைகளில் இருந்து அனைத்து ஆபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் மாற்றப்பட்டுள்ளதால், ஆய்வில் கவனம் செலுத்தப்படுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள தற்காலிக அறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆபரணங்கள், ஏ.எஸ்.ஐ ஆய்வு முடித்தவுடன் மீண்டும் ரத்னா பண்டாருக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“