/tamil-ie/media/media_files/uploads/2022/07/dakshina-karnataka.jpg)
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு. பாஜக யுவமோர்ச்சா பிரிவு உறுப்பினராக உள்ளார். பெல்லாரே கிராமத்தில் கோழிக்கடை நடத்தி வரும் இவர், நேற்று (ஜூலை 26) இரவு 9.30 மணியளவில் கடையில் இருந்து சென்ற நிலையில், இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இருவர் பிரவீனை வழிமறித்து சரமாரியாக தாக்கி வெட்டிக் கொலை செய்தனர்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு, போராட்டத்தில் இறங்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, புத்தூர், சுல்யா, கடபா மற்றும் பெல்தங்கடி ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.
கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.