/tamil-ie/media/media_files/uploads/2019/05/D58fKzMVUAAm1pH.jpg)
Section 144 imposed outside Supreme Court : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, சில வாரங்களுக்கு முன்னர், நீதிமன்றத்தில் வேலை பார்த்து வந்த உதவியாளார் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன் - ஹவுஸ் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மூன்று நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
நீதிபதி போப்டே தலைமையில் இந்து மல்கோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது இவ்வழக்கு. தலைமை நீதிபதி மீது அப்பெண் கொடுத்த புகாரில் முகாந்திரம் ஏதுமில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் படிக்க : தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை: உச்சநீதிமன்றம்
Section 144 imposed outside Supreme Court
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் கூண்டோடு கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு காவலர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது உச்ச நீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Women activists were peacefully protesting today morning against SC's acquittal of CJI of sexual harassment charges at the #SupremeCourt.
They have been detained by the police under Sec 144 & taken to Mandir Marg police station. Via @Zenanandini#SupremeInjusticepic.twitter.com/UxNwdnCMUm
— Japleen Pasricha (@japna_p) 7 May 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.