377 சட்ட நீக்கம் : 2009ம் ஆண்டு, வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பினை டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அதன் காலம் என்பது மிகவும் குறைவு தான். ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதும் சாசன சட்டம் செல்லாது என்ற அறிவிப்பிற்கு தடை விதித்து அறிவித்தது.
LGBT ஆதரவாளர்கள் பலர் “ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதுவதை தடுக்க வேண்டும்” என்று மனுக்கள் தாக்கல் செய்தனர்.
2013ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி “இந்த சட்டம் பற்றி பாராளுமன்றத்தில் பேசப்படும் என்று கூறினார். அப்போது பாஜகவின் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஆதரவாக இருந்தது மட்டுமல்லாமல் “இயற்கைக்கு மாறான இந்த உறவு முறைக்கு எப்படி சட்டம் சரி என்று சொல்லும்? என்று கேள்வி கேட்டுள்ளார்.
377 சட்ட நீக்கம் - காங்கிரஸ் கட்சியின் பார்வையும்
ஆனால் நேற்று வெளியான தீர்ப்பிற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பலரும் தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக இதுவரை 377 நீக்கம் பற்றி அமைதியாகவே இருந்து வருகிறது. இந்த அமைதியே 377 நீக்கத்திற்கான ஆதரவினை பாஜக தர மறுக்கிறது என்பது பட்டவர்த்தனமாகிறது.
2013ல் சட்ட அமைச்சராக இருந்த கபில் சிபில் இந்த நீக்கம் பற்றி குறிப்பிடும் போது "கடந்த ஆட்சியின் நாடாளுமன்றத்தில் இது பற்றிய கேள்விகளும் உரையாடல்களும் எழுப்பபடவில்லை எனில் இன்றைய தீர்ப்பு சாத்தியமில்லாமல் போயிருக்கும்” என்று குறிப்பிட்டார்.
ஆனால் அன்றைய காங்கிரஸ் ஆட்சி சில முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டது, கருத்துகளை கேட்டுத் தெரிந்து கொண்டது. இருப்பினும் அந்த உரையாடலை அங்கேயே நிறுத்திக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தி “அனைத்து மக்களின் வாழ்வும் சுதந்திரமும் உறுதி செய்யப்படும் என்பதில் தெளிவாக இருந்தார்” என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அன்றைய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி “இது தனி மனித சுதந்திரம்” என்றும் கூறினார். ஆனால் 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்பு அதைப்பற்றி பெரிதாக பேசவில்லை காங்கிரஸ். ஆனாலும் தீர்ப்பினை மறு பரிசீலனை செய்ய மனு தாக்கல் செய்தது
2014ம் ஆண்டு தேர்தலுக்கு பின்
திருநங்ககைகள் சமூகத்தினருக்கான சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. 2017ம் ஆண்டு மனநல சுகாதரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஓரினச் சேர்க்கை என்பது மனநல வியாதி இல்லை என்பதை தெரிவுபடுத்தியது மத்திய அரசு. இதனை நேற்றைய தீர்ப்பில் நாரிமன் மேற்கோள் காட்டி பேசினார்.
ஆர்.எஸ்.எஸ் கருத்து
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இச்சட்ட நீக்கம் குறித்து பேசும் போது “உச்ச நீதிமன்றம் போலவே நாங்களும் ஓரினச் சேர்க்கையினை குற்றம் என்று கருதவில்லை. ஆனால் இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற ஒரு நடைமுறைய நாங்கள் பார்த்ததில்லை. இயற்கைக்கு மாறான இந்த உறவுமுறைகளை நாங்கள் எப்போதும் ஆதரிக்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
ஓரினச் சேர்க்கை குற்றமல்ல ஆனால் அது நம் சமூகத்திற்கு எதிரானது. இதனை தண்டனைக்குரிய குற்றமாக பார்க்க இயலாது ஆனால் மனநோயாக கருதலாம். குற்றமாகவும் கருத வேண்டாம், பெருமைக்குரியதாகவும் பேச வேண்டாம் என்றும் ஆர்.எஸ்.எஸ் ஜாய்ண்ட் ஜெனரல் செக்ரட்ரி தாத்ரேயா 2016ம் ஆண்டு ட்வீட் செய்தார்.
சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள்
சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் என இவ்விரண்டு கட்சிகள் மட்டும் தான் அப்போதும் சரி இப்போதும் சரி ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.
ஐந்து வருடங்கள் கழித்து வந்திருக்கும் தீர்ப்பை காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. ஆனால் பாஜக இன்னும் இச்சட்ட நீக்கம் பற்றி மௌனம் சாதித்து வருகிறது.
377 சட்ட நீக்கம் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு
காங்கிரஸ் ஆட்சியின் போது உள்துறை அமைச்சகமும் சுகாதாரத்துறை அமைச்சகமும் ஒரே நிலைப்பாட்டினை கொண்டிருக்கவில்லை.
உள்துறை அமைச்சராக பணியாற்றிய சிவராஜ் பாட்டில் மற்றும் சட்ட அமைச்சர் எச்.ஆர். பரத்வாஜ் ஆகியோர் 377 சட்ட நீக்கத்திற்கு ஆதரவாக சொல்லப்படும் கருத்துகளில் மிகவும் கவனமுடன் இருந்தார்கள்.
சுகாதரத் துறை அமைச்சகம் மற்றொரு நிலைப்பாட்டினை கொண்டிருந்தது. உள்துறை அமைச்சகம் 377 தொடர வேண்டும் என விரும்பியது. சுகாதரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் “இச்சட்டம் தொடர்வதால் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கையாள முடியாது என்றார்.
ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியினர் இந்த சட்ட நீக்கத்தினை வெற்றியாக கொண்டாடுகிறார்கள். இது தொடர்பாக ஏன் காங்கிரஸ் ஆட்சியில் புதிய சட்டம் கொண்டு வரப்படவில்லை என்று கபில் சிபிலிடம் கேட்ட போது “புதிய சட்டத்தினை உருவாக்குவது அத்தனை எளிதல்ல. அனைவரும் அன்று ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.