ஓரினச் சேர்க்கை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று தீர்ப்பில் நடந்த சுவாரசிய நிகழ்வு.
ஓரினச் சேர்க்கை தீர்ப்பு:
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்படும் என்றும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது அபராதங்களுடன் கூடிய 10 வருட சிறை தண்டனைகளோ வழங்கப்படும் என்பதை குறிக்கும் சட்டமான 377 இன்றோடு முடிவுக்கு வந்தது.
இந்த சட்டத்தை எதிர்த்து பிரபலங்கள்,தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என பலர் தொடர்ந்த வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுது தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பில் 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான கருத்தை கூறி தீர்ப்பை வாசித்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/1-1.jpg)
5 நீதிபதிகள் ஒரே மாதிரியான கருத்துக்கள் இதோ:
1. இந்து மல்ஹோத்ரா : ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய இவ்வளவு கால தாமதம் எடுத்துக் கொண்டது உச்சநீதிமன்றம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்று குறிப்பிட்டார்.
2. நீதிபதி நாரிமன் : பாராளுமன்றத்திலும் கூட ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல . அதை விளக்கும் மன நலமருத்துவச் சட்டத்தை அனைவரும் படித்தால் விளங்கும் என்று தெரிவித்தார்.
3. ஏ.எம்.கான்வில்கார் : தன்பாலின ஈர்ப்பு புரிதல் உடையவர்கள் இந்த சமூகத்தில் மிகவும் மரியாதையுடன் வாழும் தகுதி உடையவர்களே என்று விளக்கினார்.
4. சந்திராசவுத் :ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும் அவரவர் உணர்வு மறுக்கப்படுவது இறப்புக்கு சமமானது என்று கூறினார்.
5. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா: மற்ற 4 நீதிபதிகள் கருத்துக்களுடன் சேர்ந்து, தனது தரப்பு கருத்தையும் பதிவு செய்து இறுதியில் “ ஓரினச் சேர்க்கை குற்றமில்லை” என்று தீபல் மிஸ்ரா இறுதி தீர்ப்பை வாசித்தார்.