மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான வழக்கை திரும்பப் பெறுகிறது பீகார் காவல்துறை

அதற்கான துணை ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை தயாரிக்க முடியவில்லை, 49 நபர்கள் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் கூட இல்லை

அதற்கான துணை ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை தயாரிக்க முடியவில்லை, 49 நபர்கள் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் கூட இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sedition case, bihar police, maniratnam, revathi

Case on 49 Celebrities: அதிகரித்து வரும் கொலை மற்றும் சகிப்பின்மை செயல்களை காரணம் காட்டி, இயக்குநர் மணி ரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ஷியாம் பெனகல், ரேவதி, ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி கையெழுதிட்டனர். இவர்களுக்கு எதிராக கடந்த வாரம் தேசத் துரோக வழக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்த வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளது பிகார் போலீஸ்.

Advertisment

உள்ளூர் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜாவின் புகாரை ஏற்று, முசாபர்பூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். "பிரிவினைவாத போக்குகளை ஆதரித்தல்" உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தேசத்துரோக வழக்கை அவர்கள் திரும்பப் பெறுவதை உறுதிப்படுத்திய பீகார் கூடுதல் டைரக்டர் ஜெனரல், ஜிதேந்திர குமார், “சி.ஜே.எம் நீதிமன்றத்தில் இருந்து பிரிவு 156 (3) சி.ஆர்.பி.சி.யின் கீழ் உத்தரவு கிடைத்ததும் முசாபர்பூர் காவல்துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. அத்தகைய சந்தர்ப்பத்தில், வழக்குப் பதிவு செய்வதைத் தவிர வேறு எதும் வழி தெரியவில்லை” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ”இந்த வழக்கை எஸ்.எஸ்.பி முசாபர்பூர் மேற்பார்வையிட்டார், புகார் அளித்தவரால், அதற்கான துணை ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை தயாரிக்க முடியவில்லை, 49 நபர்கள் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் கூட இல்லை” என்றார்.

Advertisment
Advertisements

சூழ்நிலை அடிப்படையில், இந்த வழக்கு தவறானது என்று கண்டறியப்பட்டு, இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க விசாரணை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு ”புகார் கொடுத்தவர் வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் கொடுத்திருப்பதைக் கண்டறிந்து, ஐபிசி பிரிவு 182 ன் கீழ் தவறான வழக்குத் தொடுப்பவர் மீது, தவறான வழக்கு பதிவு செய்ததறகான வழக்கு பதியப்படும்” என்றும் கூறினார் ஜிதேந்திர குமார்.

49 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், விசாரணை அதிகாரி ஹரேராம் பாஸ்வான் மூன்று சாட்சிகள் மற்றும் புகார் அளித்த ஓஜாவின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Bihar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: