Advertisment

தேர்தல் ஆணையர்கள் தேர்வு: பரிந்துரை பெயர்களை அனுப்பக் கோரி அரசுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

2 புதிய தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் குறித்த விவரங்களை எனக்கு அனுப்ப வேண்டும் என அரசுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
adhir.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழு நாளை (வியாழக்கிழமை) கூடும் நிலையில், மூவர் குழுவில் உள்ள  எதிர்க்கட்சி உறுப்பினரான காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அரசுக்கு கடிதம்  எழுதியுள்ளார். அதில்,  தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு  தேர்வு செய்யப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை நாளை நடைபெறும் கூட்டத்திற்கு முன் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

Advertisment

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சம், சட்டமன்றத் துறை மற்றும் சட்ட விவகாரத் துறை செயலாளர் ராஜீவ் மணிக்கு எழுதிய கடிதத்தில், தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தலைவர் தேர்வு, தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் மற்றும் விஜிலென்ஸ் கமிஷனர்கள் தேர்வு  தொடர்பாக அரசு பின்பற்றும் செயல்முறை குறித்து சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும் அதே நடைமுறையை அரசு இங்கும் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மக்களவையில் பெரிய எதிர்க்கட்சி தலைவராக உள்ள அதிர் ரஞ்சன் சௌத்ரி சி.ஐ.சி மற்றும் சி.வி.சியைத் தேர்ந்தெடுக்கும் பிரதமர் தலைமையிலான குழுவில் உறுப்பினராக உள்ளார்.

“தேடல் குழுவின் பட்டியலிடப்பட்ட நபர்களின் பயோ-புரொஃபைல்களை தேர்வுக் குழுவின் கூட்டத்திற்கு முன்பே வைத்திருப்பது அவசியம். இது இந்த விஷயத்தில் நியாயமான முடிவை எடுக்க உதவும். எனவே, நியமனத்திற்காக பரிசீலிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் அடங்கிய ‘டாசியர்’ கூட்டத்திற்கு முன்பே உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் ”என்று அவர் எழுதி உள்ளார். 

தேர்தல் ஆணையர்கள் தேர்வுக் குழுவில் பிரதமர், பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அமைச்சர் மற்றும் மக்களவையில் உள்ள தனிபெரும் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு காங்கிரஸின் சவுத்ரி இடம்பெற்றுள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்க:  https://indianexpress.com/article/political-pulse/adhir-ranjan-chowdhury-ec-names-shortlisted-government-9211000/

பிப்ரவரியில் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றதாலும், கடந்த சனிக்கிழமை அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்ததாலும் 3 பேர் அடங்கிய தேர்தல் ஆணையர்கள் குழுவில் 2 இடங்கள் காலியானது. இந்நிலையில் இந்த இடங்களுக்கான தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய தேர்வுக் குழு நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது.

நாளை தேர்ந்தெடுக்கப்படும் ஆணையர்கள் விரைவில் பதவியேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருடன் இணைந்து செயல்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment