Advertisment

சீனியர் சிட்டிசன்ஸ் ரயில் பயணக் கட்டண சலுகை இனி கிடையாது: மத்திய அமைச்சர்

ரயில்களில், மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகை மீண்டும் தொடரும் முடிவில் அரசு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
De-Reserved 2nd Class Coaches In Southern Railway

டி-ரிசர்டு முன்பதிவில்லா ரிசர்வ் பெட்டிகள் தென்னக ரயில்வே அறிமுகம்

ரயில்களில், மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகை மீண்டும் தொடரும் முடிவில் அரசு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

ரயில்களில் பயணிக்கும் 60 வயதை கடந்த ஆண்களுக்கு 40 % சதவிகிதமும் மற்றும் 58 வயதை கடந்த பெண்களுக்கு 50 % டிக்கெட் கட்டணத்தில் வரிச்சலுகை கொடுக்கப்பட்டு வந்தது.

மக்களவையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கேள்விக்கு பதில் அளித்த போது,” மூத்த குடிமக்கள் மற்றும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் ரயில்வே துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது முதல் ரயில் டிக்கெட் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 % சலுகை கைவிடப்பட்டது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையும் கைவிடப்பட்டது. 2019 -2020ம் ஆண்டுக்குள் ரயில்வே துறைக்கு  1,667 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் மக்களவையில்  தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில்வே துறை சந்தித்து வரும் இழப்புகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிதார்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment