Advertisment

'கவனமான ஆய்வு தேவை; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்கவில்லை': ப.சிதம்பரம் கருத்து

சட்டப்பிரிவு 370 ரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Senior Congress leader P Chidambaram on SC verdict abrogate Article 370 Tamil News

'ஜம்மு காஷ்மீரில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

P-chidambaram | article-370: கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொது நலவழக்குகள் தொடரப்பட்ட நிலையில், நேற்று திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

Advertisment

'ஜம்மு காஷ்மீரில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். மாநில அந்தஸ்தை விரைவாக கொடுக்க வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும்' என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ப.சிதம்பரம் பேசுகையில், "முதன்மையாக, 370 வது பிரிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை. தீர்ப்புக்கு 'கவனமான ஆய்வு' தேவைப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு திருத்தப்படும் வரை 370 வது பிரிவு மதிப்பிட வேண்டும் என்ற காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துவோம். 

ஜம்மு காஷ்மீரில் முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். லடாக் மக்களின் அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். சட்டசபை தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்கிறோம். எவ்வாறாயினும், தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், செப்டம்பர் 30, 2024 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மாநிலத்தை துண்டாடுவது மற்றும் அதன் அந்தஸ்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகக் குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யாததால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம்." என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

P Chidambaram Article 370
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment